CM Vijay: விஜய் நெற்றியை கவனித்தீர்களா? கருப்பில் இருந்து சிகப்புக்கு மாற்றம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்து வரும் முதல்வர் விஜய் நெற்றியில் கருப்பு பொட்டில் இருந்து சிகப்பு பொட்டாக மாறியுள்ளது. இது ஏன் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபை நாளையுடன் முடிய போகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 116 நாட்கள் கொண்ட தவெக அரசில் இடம் பெற்ற குற்றங்களை பட்டியலிட்டு அதற்கு முதல்வர் விஜய் எந்த பதிலையும் கூறாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

joseph vijay tamil nadu

அப்போது விஜய், "எல்லா கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதில் அளிப்பேன். அப்போது யாரும் ஓடிவிடக் கூடாது" என திமுகவை விமர்சித்துவிட்டு அவையில் இருந்து அவர் வெளியேறியிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின், எங்களை ஓடிடக் கூடாது என கூறிவிட்டு அவர் ஓடிவிட்டார்" என கிண்டல் செய்திருந்தார்.

மேலும் விஜய் பதிலளிக்க 3 நாட்கள் டைம் இருக்கு. நல்லா prepare செய்துட்டு வரட்டும் என்றும் உதயநிதி கூறியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு அவை கூடியதும் முதல்வர் விஜய் வந்திருந்தார்.

வழக்கம் போல் அவர் எல்லாருக்கும் வணக்கம் தெரிவித்திருந்தார். இதையடுத்து வருவாய்த் துறை, பத்திரப்பதிவுத் துறை சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து விஜய் பதிலுரை அளித்து வருகிறார். அவர் பொதுவாக நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைத்திருப்பார். ஆனால் இன்று சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்திருக்கிறார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநர் மாளிகை சென்ற போதிலிருந்தே கருப்பு நிற பொட்டு வைத்திருந்தார்.

அது அரஜகா திலகம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சிகப்பு பொட்டு வைத்திருந்தார். அது குங்குமமா இல்லை கஜசேகரி திலகமா என தெரியவில்லை. கஜகேசரி திலகமும் சிகப்பு நிறத்தில்தான் இருக்கும். எதிரிகளை எதிர்கொள்ள இந்த திலகம் இடுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் வைத்திருப்பது இந்த திலகம்சதானா என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+