முன்கள பணியாளர்களின் உணவில் நடந்த மோசடி.. எவ்வாறு சரி செய்தோம். மா சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் மருத்துவர்களின் உணவு மற்றும் தங்கும் வசதிக்காக இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video
சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை, கட்டணமின்றி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கான புதிய இணையதளத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,, "நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது, அதனை தொடர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்/
கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேடு என ஆய்வு மேற்கொண்டதில். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் உணவு செலவு 550 முதல் 600 ரூபாயாக இருந்தது. தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது உணவகமே வைத்திருக்காதவர்கள் வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

தினமும் 30 லட்சம் சேமிப்பு
தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த உணவகங்களில் அரசே நேரடியாக பேசியதன் விளைவாக திமுக ஆட்சியில் ஒரு நபரின் உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த அரசை காட்டிலும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் ரூபாய் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து சேமிக்கப்படுகிறது.

வீணாய் தரகருக்கு போனது
இதேபோல் மருத்துவ பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டணம் கடந்த ஆட்சியில் ரூ.900 செலவழித்த நிலையில் திமுக ஆட்சியில் ரூ.750 ஆக குறைத்துள்ளோம்/ இதனால் மாதம் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு தற்போது சுமார் 9 கோடி முதல் 10 கோடி வரை மிச்சப்படுகிறது கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பணம் வீணாக தரகர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

தடுப்பூசி அளவு
தடுப்பூசிகள் அளவை ஒன்றிய அரசு மக்களிடம் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது. ஒன்றிய அரசு தடுப்பூசிகளை அனுப்பியதும் மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும்.

முதலமைச்சர் காப்பீடு திட்டம்
தமிழகத்தில் தொற்றின் அளவு குறைந்து வருகிறது. பாதிப்பின் அளவை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது. தென் சென்னையில் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கிங்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆக்கப்பூர்வமான அறிவுறைகள் அல்லது குறைகளை சுட்டிக்காட்டினால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்தார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் வைத்த கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் விதிகளின் படியே கொரோனா இறப்பு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

விஜயபாஸ்கர்
மேலும், மருத்துவ பணியாளர்கள் உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கொரோனா காலத்திற்கு பிறகு அம்பலப்படுத்தப்படுவார்கள் செவிலியர்களுக்கு உணவு, தங்கும் விடுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் கொரோனா காலத்திற்கு பிறகு அம்பலப்படுத்தப்படுவார்கள்" இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். அவரது நிர்வாகத்தின் கீழ்தான் முறைகேடு நடந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம்சாட்டி உள்ளார். எனவே கொரோனா தொற்று குறைந்த பிறகு இது தொடர்பாக திமுக அரசு வழக்கு தொடரும் என தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications