Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.." "கையெழுத்து நான் போட்டேன்.." பொன்முடி VS எடப்பாடி! அனல்பறந்த வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் க்யூட் தேர்வு எதிர்ப்பு தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு யாரால் கொண்டு வரப்பட்டது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

பாஜக தவிர அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

காரசார விவாதம்

காரசார விவாதம்

இந்நிலையில் தீர்மானம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன், பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்ற நிலை ஏற்படும். எனவே பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு மதிப்பே இருக்காது. பன்னிரண்டாம் வகுப்பு நுழைவுத் தேர்வுக்கான தகுதித்தேர்வு போல ஆகிவிடும்.

 7.5 சதவீத இட ஒதுக்கீடு

7.5 சதவீத இட ஒதுக்கீடு

எனவே இந்த தேர்வை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் மாநில சுயாட்சி சித்தாந்தம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவ படிப்பில் சாதாரண கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். இதன் காரணமாக 800 மாணவர்கள் மருத்துவப் படிப்பினை படித்து வருகின்றனர் என்றார்.

அமைச்சர் பொன்முடி ஆவேசம்

அமைச்சர் பொன்முடி ஆவேசம்

அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கின்றபோது தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது ஆளுநர் மாளிகையின் முன்னால் நடத்திய போராட்டத்தின் காரணமாக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கையெழுத்தாகி வந்தது என்பதை மறந்து விடாதீர்கள் என ஆவேசமாக பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி பதில்

எடப்பாடி பழனிச்சாமி பதில்

அப்போது எழுந்து பேசிய தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஏற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கையெழுத்தாக காலதாமதம் ஆனது , ஆனால் தானே கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரத்தின் அடிப்படையில் கொண்டு இட ஒதுக்கீடு வரப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

நீண்ட விவாதம்

நீண்ட விவாதம்

தொடர்ந்து பேசிய தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இந்தியாவிலேயே இல்லாத ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் மாணவர்கள் பயன் பெற்றது அதிமுக ஆட்சி காலத்தில் தான் என்றார். அதனை தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் கொச்சைப் படுத்த கூடாது என பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இது குறித்து பேசினால் பெரிய விவாதம் ஆகி விடும் எனவும் சட்டப்பேரவை நேரம் கருதி அதனை தற்போது பேச வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது தொடர்ந்து பேசிய அன்பழகன் பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு குறித்து பேசினார். அதற்கு ஆவேசமாக பதிலளித்த பொன்முடி , அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்திருந்தாலும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது என பேசினார் இதனால் சட்டசபையில் அனல் பறந்தது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+