14 ஆண்டில் அதிகபட்சம்.. மழையில் “ரெக்கார்டு” வைத்த சீர்காழி! தமிழ்நாட்டின் பெருமழை பட்டியல் விபரம்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை நேரத்தில் நாகை அருகே கரையை கடந்த நிலையில், தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 7 ஆண்டுகளில் அதிகபட்ச கனமழையாக சீர்காழியில் 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தற்போது இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள் தமிழகத்தில் நீடிக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 37 சென்டி மீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 27 சென்டி மீட்டர் மழையும், காரைக்காலில் 11 சென்டி மீட்டர் மழையும், கடலூரில் 9 சென்டி மீட்டர் மழையும், சென்னை, கோவை, புதுச்சேரியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

5 ஆண்டுகளில் அதிகபட்சம்
இதில் சீர்காழியில் கொட்டித்தீர்த்த கனமழை கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பொழிந்த அதிகபட்ச மழையாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பதிவான அதித மழைப்பொழிவாக நவம்பர் மாதம் 10ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூண்டியில் பொழிந்த 31 சென்டி மீட்டர் மழை பார்க்கப்படுகிறது.

2020 மழை
அதே ஆண்டு காரைக்காலில் 29 சென்டி மீட்டர், நவம்பர் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பொழிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பெய்த அதீத மழைப்பொழிவாக டிசம்பர் 4 ஆம் தேதி கொள்ளிடத்தில் 36 சென்டி மீட்டர் மற்றும் சிதம்பரத்தில் 34 சென்டி மீட்டர் மழை பெய்தது.

பாபநாசம்
அதே ஆண்டு நவம்பர் 26 ம் தேதி புதுச்சேரியில் 30 சென்டி மீட்டர் மழையும், கடலூர் 28 சென்டி மீட்டர் மழையும் பொழிந்தது. கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவு நிகழ்வு பதிவாகவில்லை. 2017 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 45 சென்டி மீட்டர் பெய்த மழை அதிக மழையாக பார்க்கப்படுகிறது.

வர்தா புயல்
அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் காரணமாக சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 33 சென்டி மீட்டர் மழைப்பொழிந்தது அதிகபட்ச மழைப் பொழிவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ஒரே நாளில் 49 சென்டி மீட்டர் மழையும், நெய்வேலியில் 48 சென்டி மீட்டர் மழையும் கொட்டியது.

ஒரத்தநாடு
2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கடலோர பகுதியில் பெய்த பெருமழை இதுவாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பெய்த 66 சென்டி மீட்டர் மழைப்பொழிவே இன்று வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டாவில் பகுதிகளில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். அதற்கு அடுத்தப்படியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மழை நிலவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை எடுத்துக் கொண்டால், சீர்காழியில் அக்டோபரில் 152 மி.மீ மழையும் நவம்பர் 334 மி.மீ என மொத்த 487.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் அக்டோபரில் 109.4 மி.மீ நவம்பர் 452.2 மிமீ என 561 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.

தரங்கப்பாடி
மயிலாடுதுறையில் அக்டோபர் மாதம் 180 மிமீ மழையும், நவம்பர் மாதம் 254 மிமீ மழையும் என 434 மிமீ மழை பெய்து இருக்கிறது. மணல்மேடு பகுதியில் அக்டோபர் மாதம் 115 மிமீ மழையும் நவம்பரம் மாதம் 226 மிமீ மழையும் என மொத்தம் 341 மிமீ மழை கொட்டி தீர்த்து உள்ளது. அதேபோல், தரங்கம்பாடியில் அக்டோபரில் 61 மில்லி மீட்டர் மழையும், நவம்பரில் 247 மீல்லி மீட்டரும் என 308 மிமீ மழை பொழிந்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications