சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு- சென்னையிலும் மழை பெய்யும்!

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழையும், கீழச்செருவை, கோவில்பட்டியில் தலா 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அகரம் சீகூர், லப்பைக்குடிகாடு பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், பெலாந்துறை, சோலையாறு ஆகிய இடங்களல் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தேவகோட்டை, ஏற்காடு பகுதியில் தலா 7 செ.மீ. மழையும், சீர்காழி, ஆண்டிப்பட்டி, மதுராந்தகம், கொடநாடு ஆகிய பகுதிகளில் தலா 6, செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், மரக்காணம், கோத்தகிரி, வால்பாறை, தொழுதூர், திருத்துறைப்பூண்டி, ஆழியாறு, ஏத்தாப்பூர், சந்தியூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தம்மம்பட்டி, மதுக்கூர், தஞ்சை பாபநாசம், எறையூர், ஆனைமடுவு அணை, ஆண்டிமடம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டும் - கொடைக்கானலில் 23 செ.மீ மழை பதிவு!நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டும் - கொடைக்கானலில் 23 செ.மீ மழை பதிவு!

வானிலை அறிவிப்பு

வானிலை அறிவிப்பு

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இன்று, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

9 மாவட்டங்களில் நாளை கனமழை

9 மாவட்டங்களில் நாளை கனமழை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 முதல் 5-ம் தேதி வரை மழை நீடிக்கும்

3 முதல் 5-ம் தேதி வரை மழை நீடிக்கும்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை

சென்னையில் மிதமான மழை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் 4-ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, எனவே வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
Heavy rain is likely to occur in 9 districts including Nilgiris and Coimbatore tomorrow. Met office said rain may occur in few places in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X