வளிமண்டல மேலடுக்குச்சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை - நவ.25,26 அடி வெளுக்கப்போகுது
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை:
Recommended Video
வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாத நிலையில் நவம்பர் 25,26ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது. ஆரம்பம் முதலே மழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக மழையின் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள பல ஆறுகள் உயிர்பெற்று ஆக்ரோசமாக ஓடி வருகின்றன. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் ஒரு தொடர்மழை மிரட்டத் தொடங்கியுள்ளது.

கனமழை
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழக கடலோர பகுதிகளில் நிலவுவதன் காரணமாக இன்று ஈரோடு,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் மழை
நாளைய தினம் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. 24ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் காரைக்கால் புதுச்சேரியில் அனேக இடங்களில் லோசனது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை
25,26ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மழை தொடரும்
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கான அறிவிப்பு எதுவுமில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமா
இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் மேக கூட்டங்கள் திரண்டு இருப்பதால் அடுத்த ஒருசில நாட்களில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் ஏற்படுமா? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இல்லை. ஆனாலும் வங்க கடலில் மேக கூட்டங்கள் திரண்டு வருவதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications