தென் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகுதாம்.. அப்போ சென்னை? வெதர்மேன் அப்டேட்!
சென்னை: இன்று முதல் தென் தமிழ்நாட்டிற்கு மழை பெய்யும், அடுத்த 4 - 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு பகுதிகளைத் தவிர, வரும் நாட்களில் வட தமிழக மாவட்டங்கள் வறண்டதாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்குப் பருவமழையை விட தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகளின் நீர்மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (நவம்பர் 6) காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்தச் சூழலில், இன்றும், நாளையும் (நவம்பர் 7, 8) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதிவாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், நவம்பர்19 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று முதல் தென் தமிழ்நாட்டிற்கு மழை பெய்யும், அடுத்த 4 - 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும். சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிதமான மழையைத் தவிர, வரும் நாட்களில் வட தமிழக மாவட்டங்கள் வறண்டதாக இருக்கும்.
KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்) மீண்டும் இடைவேளைக்குச் செல்கிறது. அடுத்த தீவிரமான காலகட்டம் நவம்பர் 17/ 18 அன்று இருக்கும். இடைப்பட்ட நாட்களில் எங்கேனும் மழை இருக்கலாம். நவம்பர் 4வது வாரம் வங்காள விரிகுடாவில் சக்கரம் சுழல வாய்ப்புள்ளது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை!












Click it and Unblock the Notifications