5 நாட்கள் ரெஸ்ட் எடுத்த கனமழை..திங்கட்கிழமை முதல் மீண்டும் வருதாம்..தமிழகத்தை புயல் தாக்குமா?
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்று கடலோர கிராமங்களை சூறையாடியது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் உடனுக்குடன் சரி செய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை உடனடியாக திரும்பியது.

புயல் கரையை கடந்தும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் வரை தீவிர நிலையிலேயே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று கன மழை பெய்யயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவான பின்னர் அது 17, 18, 19 ஆகிய தேதிகளில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய புயல் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 18 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications