தீவிர இதயநோய்.. உயிருக்கு போராடும் 11 வயதே ஆன சிறுவன்.. காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: கடலூரில் வசித்து வரும் 11 வயதே ஆன சிறுவன் தென்னரசுக்கு தீவிர இருதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிறுவனின் சிகிச்சைக்கு 3.25 லட்சம் ரூபாய் செலவு ஆகும். தென்னரசுவின் தாய் தந்தையின் வருமானம் ஆனது அன்றாட செலவுகளுக்கே சரியாக உள்ளது. எனவே உங்களால் முடிந்த சிறு பண உதவியை செய்யலாம். நீங்கள் செய்யும் சிறு பண உதவி கூட சிறுவனின் உயிரை காக்கும். எனவே தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் தென்னரசு. சிறுவயதுக்கே உரிய குறும்பு தனத்துடன் நண்பர்களுடன் ஓடி விளையாட வேண்டிய வயதில் சிறுவனுக்கு கொடிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Rheumatic Heart Disease எனப்படும் தீவிர இருதய நோய் சிறுவன் தென்னரசுக்கு உள்ளது.

பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் Rheumatic fever காரணமாக இருதயத்தில் வால்வு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் தீவிர நோய் பாதிப்பால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு ஏற்பட்ட இந்த நோய் பாதிப்பை குணப்படுத்த உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சை செய்ய மியாட் மருத்துவமனையில் ரூ.3,25,000-( அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பது, ஆபரேஷனுக்கு பிந்தைய மருந்துகள்) செலவு ஆகும் என என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுவன் தென்னரசுவின் தந்தை குடியரசு லோடுமேன் வேலை செய்து வருகிறார். ஒருநாளைக்கு ரூ.500 மட்டுமே சம்பளமாக வாங்குகிறார்.

அவரது மனைவி ராஜைரியா விவசாய தொழிலாளியாக உள்ளார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.300 மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. இருவரின் சம்பளமும் அவர்களின் அன்றாட செலவுகளுக்கே போதுமானதாக உள்ளது. எனவே தங்கள் ஆசை மகன் தென்னரசுவின் அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகை திரட்டுவது என்பது இயலாத காரியம்.
சிறுவனின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். இருந்தாலும் எங்களால் மட்டும் இதை தனியாக செய்ய முடியாது. எனவே, சிறுவன் தென்னரசு ஆரோக்கியமாக, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நீங்களும் சிறு பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கோரிக்கை வைக்கிறோம்.

சிறுவனின் உயிரை காப்பாற்ற தங்களால் இயன்ற உதவியை ஒவ்வொருவரும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சிறியது பெரியது என்று இல்லை.. நீங்கள் செய்யும் சிறு பண உதவி கூட சிறுவனின் உயிரை காக்கும். எனவே தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications