சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல சூப்பரான இடம் ரயில் மியூசியம்.. வாங்க போகலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல சூப்பரான இடம் ரயில் மியூசியம்தான்.

இதுகுறித்து லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி அவர் அனுப்பிய அனுபவ குறிப்புகளில், நண்பர்களே ! சமீபத்தில் சென்னை சென்று இருந்தேன்.மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் ரயில்வே மியூசியம் .எங்கு உள்ளது? எப்படி பார்க்கலாம்? நண்பர்களே சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பெரம்பூர் அருகே ரயில்வே தொழிற்சாலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மிகவும் அழகான அருமையான பல்வேறு தொழில்நுட்பங்களை விளக்கக் கூடிய மாணவர்களுக்கு அதிகமாக பயனுள்ள தகவல்களை தரக்கூடிய ஒரு அருங்காட்சியமாகும் . நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆர்ட் கேலரி பார்க்கச் சொல்கிறார்கள்.

 உலக அளவிலான வளர்ச்சி

உலக அளவிலான வளர்ச்சி

ரயில்வே துறையின் வளர்ச்சி, ரயில்களின் வளர்ச்சி ,உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ளவற்றை வரிசைப்படுத்தி உள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது . இந்தியாவில் எப்படி எல்லாம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்கிற தகவல்களை மிக எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் வரிசைப்படுத்தி உள்ளார்கள். இரண்டாவதாக ரயில் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கூறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .மேலே சொன்ன தகவல்களை காட்சிப்படுத்தி தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள்.

பெரியவர்கள்

பெரியவர்கள்

கல்லூரி மாணவர்கள் குழுவாக சென்றால் பள்ளி மாணவர்கள் குழுவாக சென்றால் ,ரயில்அருங்காட்சியகத்தில் மிக அழகாக விரிவாக விளக்கி கூறுகிறார்கள். மற்றவர்கள் செல்லும்பொழுது தாங்களாக கேட்டால் மட்டுமே விளக்கங்கள் பெற இயலும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல கூடிய ட்ரைனும் குழந்தைகளுக்காக ஒட்டப்படுகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் அதில் ஏறிச் செல்லலாம். அவ்வாறு தாங்கள் ஏறிச் செல்லும் பொழுது மிகப்பழமையான நடைமுறையில் உள்ள பல்வேறு ரயில்களும் அங்கே வரிசையாக காட்சிக்கு நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. ரயில்களை ஒவ்வொன்றாக நீங்கள் ஆழமாக ரசித்து ரசனையுடன் காண இயலும். அதற்கான விளக்கங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.

 கலை நயமிக்க பொருள்கள்

கலை நயமிக்க பொருள்கள்

ரயில் நிலையத்தில் உள்ள பழைய பொருள்கள் மூலமாக பல்வேறு வடிவங்களில் காட்சிப் பொருட்கள் மிக அழகாக தயார் செய்யப்பட்டு உள்ளன .அவற்றைப் பார்க்கும்போது நமக்கே மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. வெஸ்ட் பொருள்களில் இருந்து நல்ல அழகான கலை நயம் மிக்க பொருள்கள் தயார் செய்ய இயலும் என்பதனையும் அங்கே காண்பிக்கிறது. ரயில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் ,எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவல்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது

 ட்ரெயின் கேலரி

ட்ரெயின் கேலரி

ட்ரெயின் கேலரி என்று ஒரு அறை வைத்துள்ளனர். அந்த அறையின் உள்ளே ட்ரெயினில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பல்வேறு வகையான பொருட்களை வரிசைப்படுத்தி உள்ளார்கள். பழங்காலத்து ட்ரெயின் தொடர்பான பல பொருள்களை அங்கே வரிசைப்படுத்தி உள்ளது பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

 புதிய தகவல்கள்

புதிய தகவல்கள்

இந்த ரயில் பொருட்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு புதிய விஷயங்களை கற்றுத் தருகிறது என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியாக அந்த அறையினுள்ளே பழங்காலத்தில் பயன்படுத்திய தொலைபேசி, ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே பேசக்கூடிய தொலைபேசிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது .அவற்றைக் காணும்போது நமக்கு பல்வேறு புதிய தகவல்களை கற்றுத்தருகிறது.

 மனமில்லாமல் ஆர்வம்

மனமில்லாமல் ஆர்வம்

சிறுசிறு ரயில்களை எலக்ட்ரிக்கல் மூலமாக தொடர்பு படுத்தி எவ்வாறு செல்லும்போது இன்னொரு ட்ரெயின் செல்லும் என்பதையும் , டிராபிக்கில் எவ்வாறு கதவுகள் அடைக்கப்படுகிறது, சிக்னல் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது ,போன்ற தகவல்களை இளம் மாணவர்கள் உட்பட அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் கவனிக்கும் வகையிலும் வரிசைப்படுத்தி நமக்காக ஓட்டி காண்பிக்கின்றனர். சிறு குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் ஆர்வத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

 தயாரிக்கப்பட்ட பொம்மை

தயாரிக்கப்பட்ட பொம்மை

பெரியவர்களும் அதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு உள்ளனர். அந்த சிறு சிறு டிரெயின்கள் அழகாக வட்டமிட்டு வண்ண விளக்குகளுடன் செல்லும்பொழுது நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறது . பொதுவாக நாம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பொழுது ட்ராக்கில் ஏதோ கட்டி உள்ளனர் என்று நினைக்கிறோம். ஆனால் ரயில் ட்ராக்குகளில் நான்கு அடுக்குகள் பயன்படுத்தபடுகிறது., முதல் நிலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்று நான்கு விதமான தளங்கள் அதில் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெயின் கேலரியில் முன்பாக மிக அழகான ஒரு ஸ்கிராபிக் தயாரிக்கப்பட்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டு பொருள்கள்

விளையாட்டு பொருள்கள்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் முழுவதும் நீங்கள் முழுவதுமாக அங்கே செலவிடலாம் . நன்றாக விளையாடிவிட்டு ட்ரெயின் கேலரியை ஆர்வம்தீர பார்க்கலாம். ட்ரெய்னில் எவ்வாறெல்லாம் நிலக்கரியை எடுத்து மற்றொரு பக்கம் போடுகிறார்கள் என்பதை அந்த ட்ரெயின் உள்ளேயே சென்று நாம் காணமுடியும்.

 ஒளி- ஒலி கண்காட்சி

ஒளி- ஒலி கண்காட்சி

பழங்காலத்திலிருந்து நமது இந்தியாவில் செல்ல கூடிய அனைத்து விதமான ரயில்களையும் நாம் அங்கே காண முடிகிறது . பர்ஸ்ட் கிளாஸ் ஏசி முதல் கடைசி நிலை வரை எவ்வாறு ரயில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது ,என்ஜின்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் எளிதாக பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. மூவி தியேட்டர் என்று ஒன்று வைத்துள்ளனர் .இந்த மூவி தியேட்டரை சென்று கேட்டால் மட்டுமே அவர்கள் போட்டு காண்பிக்கிறார்கள். ஏனென்றால் சில தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் குறைந்தது இருபது பேர் இருந்தால் அந்த மூவி தியேட்டரில் ரயில் வாழ்க்கை வரலாறை போட்டு காண்பிக்கிறார்கள். இரண்டு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒளி ஒலி கண்காட்சியில் நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நம் ஆழ் மனதில் பதியுமாறு எடுத்துரைக்கின்றனர்.

 மகிளா யூனிட்

மகிளா யூனிட்

ஒரு யூனிட்டிற்கு மகிளா யூனிட் என்று பெயர் வைத்து முற்றிலும் பெண்களே இயக்கக்கூடிய, தயாரிக்கக் கூடிய ஒரு யூனிட் அங்கே ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது .அதன் மூலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கும் பணியில் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளனர்.

தகவல்கள்: லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி

English summary
Here are the details about Rail Museum in Chennai Villivakkam. It is the best place for kids and adults to enjoy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X