சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமராஜன்.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே.. கோடி கோடியா கொட்டினாலும்.. நா தழுதழுத்து ஒரே உருக்கம்..!

ராமராஜன் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து உருக்கத்துடன் பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ராமராஜன் நீண்ட நாளைக்கு பிறகு திரைப்பட விழா ஒன்றில் பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.. அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

ரஜினி, கமலுக்கு இணையான அளவுக்கு ஒரு காலத்தில் பேசப்பட்டவர் ராமராஜன்.. மார்க்கெட்டை இழந்தாலும், இன்றுவரை ரசிகர் பட்டாளத்தை தன்னிடத்தில் வைத்து கொண்டிருக்கும் ஆச்சரிய பிரபலம்.

மேலூரில் தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலையில் இருந்த ராமராஜன் எம்பியாக உயரும் அளவுக்கு செல்வாக்கை பெற்று தந்தது அவரது உழைப்பும், எம்ஜிஆர் மீதான அபரிமிதமான அன்பும், அதிமுக மீதான அவரது விசுவாசமும்தான்.

கிராம ராஜனாக எவர்கிரீன் ராமராஜன்! ஒரே ஒரு போன் கால் தான்.. குவிந்த ரசிகர்கள்! மவுசு குறையாத ஹீரோ! கிராம ராஜனாக எவர்கிரீன் ராமராஜன்! ஒரே ஒரு போன் கால் தான்.. குவிந்த ரசிகர்கள்! மவுசு குறையாத ஹீரோ!

 அச்சாணி

அச்சாணி

நடிப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், எளிமையான உடையும், கள்ளம் கபடமற்ற பேச்சும், கிராமப்புற மக்களை ஈர்க்கும்படியான பாடிலேங்குவேஜும், கலர் கலரான சட்டையும், எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையிலான வசனங்களும், அவருக்கென தனி கூட்டத்தை உருவாக்கி தந்தது.. இதற்கெல்லாம் இளையராஜாவின் இசையும் ஒரு அச்சாணியாக இருந்ததை மறுக்க முடியாது.. தமிழகம் முழுவதும் ராமராஜனுக்கு ரசிகர் மன்றங்கள் அதிகமாகின என்பதுடன், அந்த மன்றங்கள் இன்றுவரை அவருக்கு பக்கபலமாக இருந்து வருவதுதான் பலருக்கும் வியப்பை உண்டாக்கி வருகிறது.

 மியூசிக் தேவா

மியூசிக் தேவா

இவர், கீழ் மட்டத்திலிருந்து உயர்ந்து வந்தவர் மட்டுமல்ல, சினிமா துறையிலேயே நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்து ஆளாக்கி இருக்கிறார் என்பது பலரும் அறியாத உண்மை... இசையமைப்பாளர் தேவா இவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் என்றுகூட சொல்வார்கள்.. அரசியலில் காலடி வைத்ததுமே நிறைய ஏற்ற இறக்கங்களை, துரோகங்களை நேரடியாக சந்தித்தார்.. இதற்கு நடுவில் குடும்ப பிரச்சனை, விபத்து என அடுத்தடுத்த நிகழ்வுகள் ராமராஜனை புரட்டி போட்டுவிட்டது.. எனினும் சினிமாவில் இவர் ஒதுங்கியே விட்டதாக சொன்னார்கள்..

 ராமராஜன்

ராமராஜன்

இதற்கு காரணம், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக ராமராஜன் இருப்பதாக தகவல்கள் வந்தன.. ஆனால் அதெல்லாம் பொய் என்று ராமராஜன் அடித்து சொல்கிறார்.. சாமானியன் என்ற படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார் ராமராஜன்.. அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன் சில விஷயங்களை உருக்கத்துடன் பேசினார்.. அப்போது, 2 தரப்பினரை நன்றியுடன் குறிப்பிட்டார்.. ஒன்று அவரது ரசிகர்கள் மன்றங்கள், மற்றொன்று மீடியா.

 ராமராஜன் உருக்கம்

ராமராஜன் உருக்கம்

"ராமராஜன் பேசும்போது, "இந்த விழாவின் திடீரென இடம் மாறி விட்டதாக சொன்னார்கள்.. ரசிகர் மன்றத்தினரையும் வர சொல்லுங்கள் என்றார்கள்.. உடனே நான், ஒருசிலருக்கு மட்டும்தான் நேற்று காலையில் தகவல் தந்தேன்.. சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக, உடனடியாக எல்லாரும் கிளம்பி இங்கே வந்திருக்காங்க என்னுடைய உடன்பிறவா சகோதரர்கள்.. என்னுடைய தாய், தகப்பனைவிட மதிக்கக்கூடியவர்கள்.. ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை உடனிருக்கிறார்கள்..

 ஹீரோவா?

ஹீரோவா?

அதேபோல பத்திரிகையாளர்களும்.. எப்பவுமே நான் மேடையில் பேசினால் ஒரு மைக்தான் இருக்கும்.. ஆனால், இத்தனை மைக், இத்தனை கேமரா வைத்திருப்பது இந்த மேடையில்தான்.. மனசார பாராட்டுகிறேன் உங்களை.. அரசியல், சினிமா, பொதுநிகழ்ச்சி எதுவானாலும், எந்த விஷயமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஒரே மூலதனம் மீடியாதான்.. உங்களை எல்லாம் பாராட்டியே தீர வேண்டும்.. நீங்கள் இல்லாவிட்டால், மக்களுக்கு எப்படி நிகழ்வுகள் தெரியும்? உங்கள் சேவை மகத்தானது.

 பார்ட் 2

பார்ட் 2

அதேபோல, நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொன்னார்களாம்.. ஆனால், அப்படி கிடையாது.. இந்த சாமான்யம் படத்தில்கூட நான் ஹீரோ கிடையாது.. கதைதான் முதல் ஹீரோ.. கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படத்தில் நடிக்க மாட்டேன்.. ஒரு பெரிய விபத்தில் சிக்கி ஒரு வருடத்திற்கு மேல் ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு பலரும் வந்து என்னிடம் கதை சொன்னார்கள், நடிக்க அழைத்தார்கள், கோலிசோடா 2, கரகாட்டக்காரன் 2 படங்களில் நடிக்க கேட்டார்கள். எனக்கு இரண்டாம் பாக கதைகளில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.

நியாயம்

நியாயம்

நான் 'மக்கள் நாயகன்' என்று பெயர் எடுத்தவன். அதனால், மக்களுக்கு பயனுள்ள படங்களில்தான் நடிப்பேன். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன்... நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற எங்கேயும் சொன்னதில்லை. அப்படி யாரோ சொல்லி பரவியது. சரி அதுவும் நியாயம்தான் என்று நானும் அமைதியாக இருந்து விட்டேன். இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. நல்ல கதையோடு வந்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

English summary
Hero Ramarajan has praised Media and his Fan Association in Chennai Function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X