கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் தாலிகட்ட முடியுமா? தேர்தலில் மாப்பிள்ளை திமுகதான்! எப்படி தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் இந்த முறை இந்திய அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருமுனைப் போட்டி நிலவும் நிலையில், தமிழகத்தில் நான்குமுனை - ஐந்து முனை என பல்முனைப் போட்டி நிலவுவதே அதற்கு காரணம். அதிலும், குறிப்பாக, யாரும் எதிர்பாராத அளவில் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த அதிகமான வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக அமையும்? யாருக்கு பாதகமாக அமையும்? என்ற கேள்வி தற்போது அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது. குறிப்பாக விஜய்யால் யாருக்கு பாதிப்பு? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குப் பிரிப்பே ஆகும். புதிய கட்சி என்பதால், குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் அதிகமாக விஜயை ஆதரித்திருக்கலாம் என்ற கணிப்புகள் உள்ளன.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னம் பெரியர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது வீட்டிலுள்ள சிறியவர்களிடம் கூட நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிக வாக்குகள் நேரடியாக விஜய்க்கு சாதகமாக அமையும் என்ற கருத்தும் சில தரப்புகளில் முன்வைக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்
"இந்த முறை விஜய் பல தொகுதிகளில் வெற்றி பெறுவார்", "யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது", "விஜயின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கலாம்" என்ற பல்வேறு அரசியல் கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. ஆனால், இதற்கு மாறாக ஆளுங்கட்சியான திமுக சார்ந்த புள்ளிவிபர நிபுணர்கள் வேறு மாதிரியான கணக்குகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சுமார் 2.09 கோடி வாக்குகளைப் பெற்றது.
85% வாக்குப்பதிவு
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சுமார் 1.83 கோடி வாக்குகளைப் பெற்றது. நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தது. மற்ற சில கட்சிகளும் பல லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தன. இந்த முறை நடிகர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் அதிகபட்சமாக 20 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியிடமிருந்து சுமார் 30 சதவீத வாக்குகளையும் பெற்றால் என்ன நடக்கும் என்ற கணக்கை சில அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு
அந்த கணக்குப்படி பார்த்தால், திமுக கூட்டணிக்கு சுமார் 1.79 கோடி வாக்குகள் கிடைத்து 40 சதவீதத்துக்கும் மேல் வாக்கு சதவீதம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு சுமார் 1.54 கோடி வாக்குகள் கிடைத்து 34 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு சுமார் 92 லட்சம் வாக்குகள் கிடைத்து 20 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் கிடைக்கும் என்ற மதிப்பீடும் கூறப்படுகிறது.
விஜய் தவெக வாக்கு
பொதுவாக விஜய் பிரிக்கும் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக இருக்கும் என்ற கருத்து சில இடங்களில் பேசப்பட்டாலும், திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளிடமிருந்தும் சம அளவில் வாக்குகள் பிரிகின்றன என்ற கணக்கில் பார்த்தாலும் திமுக கூட்டணி சுமார் 6 சதவீதம் கூடுதல் வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கணக்குப்படி பார்த்தால், விஜய் அதிக வாக்குகளைப் பெற்றாலும் அது திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை பெரிதாக பாதிக்காது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
தேர்தல் கணிப்பு 2026
மாறாக, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பல திசைகளில் சிதறுவது, திமுக மீண்டும் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவதற்கே சாதகமாக அமையலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த தேர்தலில் விஜய் சுமார் 20 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றாலும், திமுக மீண்டும் ஆட்சியைத் தொடரும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்ற கருத்து புள்ளிவிபர அடிப்படையில் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், அதிக வாக்குப்பதிவு மற்றும் தவெகவுன் தாக்கம் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாகும் வரை எந்த கணிப்பையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதும் முக்கியம்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications