வீட்டு கடன் வாங்கறீங்களா? பெண்கள் பெயரில் வீட்டுக்கடன் வாங்கினால் வட்டி, வரி சலுகை பாருங்க! செம பலன்
சென்னை: இன்றைய காலத்தில் வீடு கட்டுவது என்பதே பெரும் கனவாக இருந்து வருகிறது.. அப்படி வீடுகளை கட்டுவதாக இருந்தால், வங்கி கடனையே மலைபோல நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.. இதையும் நீண்ட காலத்துக்கு செலுத்த வேண்டியிருக்கிறது.. இதில், பெரும்பாலும் ஆண்களே வங்கி கடனை பெறுவதை காண முடிகிறது.. ஆனால், பெண்கள் வங்கி கடன் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள், வசதிகள் என்னென்ன தெரியுமா? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வங்கி கடனை ஆண்கள் பெரும்பாலும் வாங்குவதற்கு காரணம், அவர்களது வங்கிக் கணக்கில்தான் சம்பளம் வந்து சேருகிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் அப்படி சொல்லவில்லை.

முன்னணியில் பெண்கள்
கடந்த 2019ல் ஆனரோக் என்ற இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் வீடு வாங்குபவர்களில் 30% - 35% சதவிகிதத்தினர் பெண்கள் என்பது தெரியவந்தது. அதேபோல வீடு வாங்கக்கூடிய பெண்களில் 78% பேர் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வீடு வாங்குவதாகவும், 22% பேர் முதலீட்டு நோக்கத்தில் வீடுகளை வாங்குவதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபகாலமாகவே பெண்கள் பெயரில் வீட்டுக் கடன்கள் வாங்குவது அதிகரித்திருப்பதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. அதாவது, கடன்களை பொறுத்தவரை பெண்களின் பெயரில் வாங்கும்போது வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவிலான சலுகை கிடைக்கிறது..
வட்டி விகிதங்கள் குறைவு
கடன் வழங்கும் நிறுவனங்கள் 0.05% முதல் 0.10% வரை வட்டி விகிதத்தை குறைக்கின்றன.. மிக குறைவான சதவீதம் போல இது தெரிந்தாலும்,நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும்போது ஒரு கணிசமான தொகையை இதன் மூலம் சேமிக்க முடிகிறது..
உதாரணத்துக்கு ரூ.1 கோடிக்கு வீட்டுக்கடன், 20 வருட காலத்திற்கு ஆண் பெயரில் வாங்க நேரிடும்போது, அவர்களுக்கான வட்டி 8.9% ஆக இருக்கும்,.,. இதுவே ஒரு பெண்ணின் பெயரில் வாங்கும்போது அது 8.8% என்று குறைகிறது. இதனால் வட்டியில் ரூ.1 லட்சம் சேமிக்க முடிகிறது..
வருமான வரி விலக்கு
அதுமட்டுமல்ல, வருமான வரி சட்டத்தின் பிரிவு 24Bன் கீழ் பெண்களின் பெயர்களில் வீடு வாங்கும்போது அதற்காக அவர்கள் செலுத்தும் வட்டியானது, வருடத்துக்கு 2 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.
அதேபோல, வீட்டு கடனுக்கான பிரின்சிபல் தொகையை திரும்ப செலுத்தும்போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு பெறலாம். தம்பதியாக சேர்ந்து வீட்டு கனை பெற்றாலும்கூட, அவர்கள் தனித்தனியாக இந்த வரி சலுகைகளை அனுபவிக்க முடியும்.
வீட்டுக்கடன்
பெண்கள் இதற்கு முன்பு எங்கும் கடன் வாங்காதபட்சத்தில், அவர்களின் சிபில் ஸ்கோர் வலுவாக இருப்பதால், வீட்டுக்கடனுக்கு ஒப்புதலும் எளிதில் விரைந்து கிடைத்துவிடும்.. அதிகளவிலான கடன் தொகையையும் பெற முடியும்..
குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெண்களின் பெயரில் வீடு அல்லது சொத்துகளை வாங்கும்போது, பத்திரப்பதிவு கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்படுவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது..
பெரும்பாலும் கடன் வாங்கும் பெண்கள், குறைந்த வட்டி விகிதங்களுடன், அதிக வட்டி செலுத்தும் கடன் தகுதியிலிருந்து பயனடைகிறார்கள். அதிலும் பெண்கள் பணம் செலுத்துவதில் தவறுவதே கிடையாது என்பது கூடுதல் விஷயமாக பார்க்கப்படுகிறது.
நிதி சுதந்திரம் - பாலிசிகள்
அதிக அளவிலான நிதி தொடர்பான விஷயங்களில் சுதந்திரமாகவும் பெண்களால் முடிவெடுக்க முடிகிறது என்பதால்தான், அரசாங்கமும், நிதி நிறுவனங்களும் பெண்களுக்கு வீட்டுக் கடன்கள் பெறுவதை எளிதாக்கும் வகையில் பாலிசிகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
பெண்களுக்கு வழங்கப்படும் இதுபோன்ற சலுகைகள், அவர்களை நிதி ரீதியாக மேம்படுத்தவும், சொந்தமாக வீடு வாங்கும் அவர்களின் கனவை நனவாக்கவும் உதவுகிறது. இதனால், வீட்டு உரிமையை ஊக்குவிக்கிறது.
தகுதிகள் - ஆவணங்கள்
அதிக கடன் தொகையை பெற வேண்டுமானால், பெண்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதுதவிர நிலையான வருமானம் மற்றும் சிறந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
பெண்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் சில பொதுவாக தேவைப்படும்.. குறிப்பாக, அடையாளச் சான்றிதழுக்காக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, செல்லுபடியாகும் பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவை தேவைப்படும்..
வசிப்பிட சான்றிதழாக, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொலைபேசி பில், மின்சார பில், தண்ணீர் பில், எரிவாயு இணைப்பு பில் போன்ற எந்தவொரு பயன்பாட்டு பில்லின் நகல் தேவைப்படலாம்,.. இதைத்தவிர, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள், முறையாக நிரப்பப்பட்ட படிவம், வங்கி அறிக்கைகள், சம்பள சீட்டுகள் போன்ற ஆவணங்களும் தேவைப்படலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications