சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஸ்பீட்.. டாப் கியரில் செல்லும் ஸ்டாலின்.. தேர்தலே இன்னும் முடியலை.. அதுக்குள்ள ஏன் இந்த திட்டம்?

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலே இன்னும் முடியவில்லை.. இன்றுதான் வேட்பாளர் இறுதிப்பட்டியலே வெளியாகிறது.. ஆனால் அதற்குள் திமுக அடுத்தடுத்து திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டதாம். திமுக கேம்பில் அப்படி என்ன நடக்கிறது?

தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியும் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறதாம். கருத்து கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக வந்து இருப்பதால் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்று உற்சாகத்தில் திமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

டைம்ஸ் நவ், ஏபிஏ, சி வோட்டர் போன்ற தளங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் எல்லாம் திமுக கூட்டணி கண்டிப்பாக 150+ இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் திமுகவின் உற்சாகத்திற்கு காரணம்.

திமுக

திமுக

ஆனால் திமுக இந்த கருத்து கணிப்புகளை மட்டும் நம்பவில்லையாம். இதுபோக திமுகவே தங்கள் கட்சி சார்பாக வேறு சில கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது. ஐபேக் ஊழியர்கள், நிர்வாகிகள் மூலம் எடுக்கப்பட்ட சர்வேயிலும் திமுகவிற்கு பாசிட்டிவாகவே ரிப்போர்ட் வந்துள்ளது என்கிறார்கள். இதுதான் உற்சாகத்திற்கு காரணம்.

திட்டம்

திட்டம்

இதனால் இப்போதே திமுக தலைவர் ஸ்டாலின் யாரை எல்லாம் அமைச்சராக தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறாராம். இப்போதே ஆலோசனை செய்தால்தான் தேர்தல் முடிந்த பின் பிரச்சனை வராது. எந்தெந்த கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம், காங்கிரசுக்கு எந்த பதவிகளை கொடுக்கலாம், விசிக, மதிமுகவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று ஸ்டாலின் இப்போதே ஒரு ஆலோசனையில் உள்ளனராம்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதற்காக ஸ்டாலின் தரப்பு ஒரு லிஸ்டை தயார் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதை சில தலைமை கழக நிர்வாகிகள் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. யாருக்கு எல்லாம் பதவி கொடுக்கலாம் என்று இதில் உள்ளது. ஆனால்இன்னும் இந்த லிஸ்ட் முழுமையாக தயார் செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

வெற்றி

வெற்றி

ஸ்டாலின் ஒரு விஷயத்தை மனதில்தான் வைத்துதான் இந்த லிஸ்டை தயார் செய்கிறார் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை வைத்தே இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பின் இதில் மாற்றங்கள் செய்தாலும்.. அமைச்சரவை தேர்வில் ஸ்டாலினின் முடிவே இறுதியாக இருக்கும் என்கிறார்கள் அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்கள்.

வேட்பாளர்

வேட்பாளர்

ஆனால் இப்போதே இவ்வளவு வேகம் அவசியமா.. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் உள்ளது .. அதுவரை தேர்தல் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சில நிர்வாகிகள் முணுமுணுக்கிறார்கள். வெற்றி உறுதி என்று திமுக நம்புவதால் இப்படி அமைச்சரவை குறித்து சிந்திப்பதாக தெரிகிறது.

English summary
Hoping for the victory, DMK Chied M K Stalin is already planning for the ministerial berth list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X