ஒத்த மனிதராக 10 ஆண்டுகள்? கந்தசாமி தாத்தா மறைவால் அநாதையான மீனாட்சிபுரம் கிராமம்!
சென்னை: தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் ஆட்களே இல்லாத கிராமமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகத் தனி ஒருவராக வாழ்ந்து வந்த கந்தசாமி தாத்தாவும் மரணமடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளே இல்லாத ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? எந்தக் குக்கிராமத்தில் போய் இறங்கினாலும் அந்தப் பகுதியில் 4 வடநாட்டு இளைஞர்களைப் பார்க்கும் அளவுக்குத் தமிழ்நாட்டில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட ஆளே இல்லாத ஒரு கிராமம் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்த தாத்தா கந்தசாமி சமீபத்தில் இயற்கை எய்தினார். அவரை மட்டுமே நம்பி இருந்த அந்தக் கிராமம் இப்போது அநாதையாக மாறி இருக்கிறது.
இந்த மீனாட்சிபுரம் கிராமம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அதாவது செக்காரக்குடி பஞ்சத்துக்கு உட்பட்ட பகுதியான இந்த மீனாட்சிபுரம் ஒரு தனி வருவாய் கிராமம். இந்த ஊரைச் சுற்றி செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, சொல்லகிங்கபுரம் என சில கிராமங்கள் இருக்கின்றன.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மீனாட்சிபுரத்தில் 1269 பேர் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. சரியான மழை இல்லாதது, விவசாயம் பொய்த்துப் போனது, வேலை வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களால் படிப்படியாக இந்த மக்கள் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது.
வாழ வழி தேடிப் பல ஊர்களுக்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர, கடைசிவரை விடாப்பிடியாக இந்த ஊரிலேயேதான் உயிர்போகும் வரை வாழ்வேன் என்று வசித்து வந்துள்ளார் தாத்தா கந்தசாமி.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வெளியேற வாழ்ந்த வீடுகள் பாழடைந்து போக ஆரம்பித்துள்ளன. ஊரும் சாலையும் கூட முள் காடுகளாக மாறியுள்ளன. இந்தக் கிராமத்திற்குள் நுழையும் போதே, ஏதோ ஒரு பாலைவனத்திற்குப் போவதைப் போலப் பாதைகள் காட்சி தருகின்றன.

அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால் தாங்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே அநாதையாக விட்டுவிட்டு மக்கள் வெளியேறிப் போனதுதான் மாபெரும் சோகம்.
அந்த வீடுகளைப் பார்த்தால், பழமை மாறாத தமிழர்களின் வீடுகளாகக் காட்சி தருகின்றன. ஆனால், அனைத்தும் உடைந்து போய் அரைகுறையாக இருக்கின்றன. கூரை வீட்டில் தொடங்கி காரை வீடுவரை, சீமை ஓடு போட்ட வீட்டில் தொடங்கி நாட்டு ஓடு வேய்ந்த வீடுகள் வரை விதவிதமாக கரைந்து போய் காட்சி அளிக்கின்றன.

இதே ஊரில் செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம் ஒன்றும் பாழடைந்துபோய் நிற்கிறது. அதற்குக் குழந்தைகள் எழுதிப் பழகிய கரும்பலகைகளில் முத்து முத்தான எழுத்துகள் இன்னும் மறையாமல் ஒளிர்கின்றன.
தொலைவில் எங்கோ, காற்றாலையில் விசிறிகள் சுற்றிக் கொண்டே நிற்கின்றன. தோற்றம் இழந்து காணப்படும் இந்தக் கிராமத்தில்தான் இத்தனை ஆண்டுகள் ஒற்றை மனிதனாகக் கந்தசாமி தாத்தா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தக் கிராமத்தில் அவர் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அவருக்குப் பின் அவரது மகன் இருக்கிறார். ஆனால், இந்தக் கிராமத்தில் இல்லை.
இந்த ஊரில் ஒரு கோயில் உள்ளது. அது பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. ஆகவே வைகாசி மாதம் திருவிழா தடபுடலாக நடக்கும். அப்போது வெளியேறிப் போன அத்தனை உறவுக்காரர்களும் ஊருக்குள் வந்து குழுமி விடுவார்கள். கொட்டை போட்டு மூன்று நாள் கறிசோறு சமைத்து படையல் வைத்துவிட்டு வெளியேறிவிடுவார்கள்.
அதன்பிறகு மீண்டும் சோக ராகம் பாட ஆரம்பித்துவிடும் மீனாட்சிபுரம்.
இந்த ஊரில் ஆள் யாரும் இல்லை என்றாலும், ஏக்கர் கணக்கில் பலருக்கும் நிலங்கள் உள்ளன. 50 ஏக்கர் தொடர் 5 ஏக்கர் வைத்துள்ளவர் வரை இருக்கிறார்கள். ஆனால், அதனால் ஒரு பலனும் இல்லை. வானம் பார்த்த பூமியை வைத்து ஒரு வசதியும் பெறமுடியவில்லை இந்தக் கிராம மக்களால்.
இறப்பதற்கு முன்னால் ஒத்தை ஆளாக வாழ்ந்த கந்தசாமி தாத்தாவிடம், 'இந்த ஊரில் வாழ்வது பயமாக இல்லையா?’ என்று கேட்டபோது அவர், 'எனக்கு எந்தப் பயமும் கிடையாது.
இந்த ஊரில் பக்கத்தில் உள்ளவர்கள் தரும் தகவலின் படி 2006இல் மீனாட்சிபுரத்தில் 300 வீடுகள் இருந்துள்ளன. அதன்பின்னர் 2011இல் ஊரே வெறிச்சோடி போய்விட்டது. அப்போதும் விடாப்பிடியாகக் கந்தசாமி நாயக்கர் தாத்தா தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அதன் பின்னர் மனைவி மறைந்த பிறகு தன்னந்தனியாக 10 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இப்போது 2024இல் அவரும் இறந்துவிட்டார். இன்றைய தேதிக்கு மீனாட்சிபுரம் ஆள் இல்லாத கிராமமாகி நிற்கிறது.
ஒரு காலத்தில் 5 ஆம் வகுப்புவரை பள்ளி, தனிப் பஞ்சாயத்து ஆபீஸ், ஒரு டிவி அறை, பண்ணையார், மிட்டா மிராசு எனச் செழிப்பாக இருந்த இந்தத் தாய் கிராமத்திற்கு என்றே ஒரு விஓ என்று சிம்மசொப்பனமாக நிகழ்ந்த பூமி, இன்று திக்குத் திசை தெரியாமல் உருவம் இழந்து போய் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications