சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குலுங்கி குலுங்கி" அழுத ராஜன்.. இப்ப ஆதரவு.. கூட்டணியை மதித்த ஸ்டாலின்.. ஈவிகேஎஸ் தேர்வானது எப்படி?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மக்கள் ராஜன் தான் கண்கலங்கியது ஏன் என விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜன் உறுதி கூறியுள்ளார்.. மேலும், தான் கண்கலங்கியது ஏன் என்பது குறித்தும் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, காங்கிரஸ் கட்சி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் பரவலாக எழுந்தது.

அப்போது, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் தேசிய தலைமை அறிவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிவித்திருந்தார்.

இந்த நேரத்தில்தான், இடைத்தேர்தலில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது..

ஈரோடு கிழக்கில் யாருக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுப்பாரா?..ஆலோசிக்கும் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கில் யாருக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுப்பாரா?..ஆலோசிக்கும் கமல்ஹாசன்

 கண்ணீர் கண்ணீர்

கண்ணீர் கண்ணீர்

ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்... இதனால், போட்டியிட விரும்பிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் ஏமாற்றம் அடைந்தார்.. நேற்று முன்தினம் மீடியாவுக்கு பேட்டி அளிக்கும்போது, கண்ணீருடன் நா தழுதழுக்க பேசினார்.. தன்னுடைய சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இல்லை, இறந்துட்டாங்க.. ஆனாலும், உழைத்து முன்னுக்கு வந்து காங்கிரஸில் இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்றி வருகிறேன்... நான் கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்விடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன் என்று கண்ணீருடன் சொன்னார்..

 தேம்பி தேம்பி

தேம்பி தேம்பி

மீடியா முன்பு ராஜன் அழுவதை பார்த்து, காங்கிரஸ் கட்சி லேசாக அதிர்ந்தது என்றாலும், தன் வேட்பாளர் முடிவில் உறுதியாகவே இருந்தது. இதற்கு பிறகு, மறுபடியும் மக்கள் ராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தான் அழுதது ஏன் என்று விளக்கத்தை தந்துள்ளார்.. "ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியில் சீனியர்.. இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.. அவர் அதை மறுக்கவில்லை. வயது முதிர்ந்தாலும் அவர் எண்ணத்திலும் செயல்பாட்டிலும் என்றுமே அவர் இளைஞர்தான்.. அவரும் எத்தனையோ பேருக்கு ரோல் மாடலாக இருந்திருக்கிறார்... நானும் கூட இந்த தலைவர்போல வரமாட்டோமா என்று நினைத்த காலங்களும் உண்டு. இன்றைக்கும் அவர் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய தலைவர். இந்த தேர்தலில் அவர் பம்பரமாக சுழன்று அதிக பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெறுவார்" என்று கூறியிருந்தார்.

ராஜன்

ராஜன்

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இளங்கோவன்தான் வேட்பாளர் என்று கட்சிக்குள் உச்சரிக்கப்பட்டு வந்தபோதும்கூட, ராஜன் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்.. அடுத்த நாளே அவரது நிலைப்பாடு மாறியுள்ளதுடன், இளங்கோவன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று
கூறியிருப்பது வரவேற்பை பெற்று வருகிறது.. இந்த சூழலில்தான், இளங்கோவனை வேட்பாளராக மேலிடம் அறிவித்தது எப்படி? என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஈவேகேஎஸ்

ஈவேகேஎஸ்

திருமகன் ஈவெரா காலமான தகவல் அறிந்ததுமே, ஈவிகேஎஸ் இளங்கோவனின் இல்லத்துக்கு முதல்வர் வந்தபோது, அவரை பார்த்ததுமே இளங்கோவன் உட்பட அவரது குடும்பத்தார் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர்.. அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, முதல்வர் கிளம்பியபோதே, அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸுக்கு மறுபடியும் வாய்ப்பளிப்பது என்றும், குறிப்பாக இளங்கோவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பளிக்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்பது என்றும் முடிவு செய்துவிட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

 இளங்கோவன்

இளங்கோவன்

அதன்படிதான், ஈரோடு கிழக்கில், காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக முதலிலேயே அறிவித்துவிட்டார் அழகிரி என்கிறார்கள்.. ஜனவரி 15ம் தேதி, இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதல்வர் வழங்கும்போதுகூட, இடைத்தேர்தலில் அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை இளங்கோவனிடமே முதல்வர் சொன்னாராம்.. இதற்கு பிறகுதான், இளங்கோவனின் மனைவி, அல்லது மகன், இவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பளிப்பது என்றே இளங்கோவன் நினைத்திருந்தார்.

 கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம்

ஆனால், இளங்கோவனே நேரடியாக போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்த துவங்கினர்.. அதற்கேற்றவாறு, கட்சி மேலிடமும் இளங்கோவனை தற்போது அறிவித்துவிட்டது என்கிறார்கள்.. இதில் ஒரு விஷயத்தை காங்கிரஸ் தரப்பு தெளிவுபடுத்துகிறது.. கூட்டணி தர்மத்தை மதித்து, தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் எண்ணமாக இருந்தாலும், வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை முடிவெடுத்தது எல்லாமே காங்கிரஸ் மேலிடம்தான், போட்டியிட விரும்புவோரின் பட்டியலை மட்டுமே மேலிடத்துக்கு அனுப்பிவைத்து, அதன்பிறகுதான் மேலிடம் வேட்பாளரை முடிவு செய்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்...!!!

English summary
How did Senior leader EVKS Elangovan get the chance as erode east congress candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X