6 லட்சம் கோடி முதலீடு வந்தது எப்படி? 27 லட்சம் வேலைவாய்ப்பு வந்தது எப்படி?
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்திய அளவில் இந்த மாநாடு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த அளவுக்காக முதலீட்டை திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளுக்குத் தமிழ்நாடு பெற்றுள்ளது. அதற்குக் காரணம் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கியது.
குறிப்பாக நேரடியாக ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் சென்று காத்திருக்காமல், மிக எளிதாக ஆன்லைன் மூலமே அனுமதி பெறுவதற்கான ஆன்லைன் வசதிகளை ஏற்படுத்தித் தந்தது.
அதற்கு அடுத்துக் கடந்த 2 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக அளவில் ஊக்குவித்தது. அதற்காக மானியங்களை அரசு அறிவித்தது.

9 மாதங்களில் ரூ.1.43 லட்சம் கோடி முதலீடு:
இதனால் ஈர்க்கப்பட்ட பல புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விரும்பி வர ஆரம்பித்தன.
குறிப்பாகச் சொல்லப்போனால் திமுக ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் ரூ.1.43 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தது. அதற்கு முதற் காரணம், தொழில் தொடங்குவதற்கான புதிய கொள்கை திட்டங்களை வகுத்தளித்தது.
இதன் பயனாகத் தமிழ்நாட்டு இந்தியாவிலேயே ஏஞ்சல் முதலீட்டில் முதல் மாநிலம் என்ற நிலைக்கு உயர்ந்தது. நம்மைவிட முன்வரிசையிலிருந்த குஜராத் அடித்துத் தள்ளிவிட்டு, முதல் இடத்திற்கு முன்னேற்றினார் ஸ்டாலின்.

மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை பல நாடுகளைத் தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது.
இவை மட்டுமல்ல; நேரடியாகத் துபாய், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணித்து முதலீட்டாளர்களைச் சந்தித்து அழைப்பு கொடுத்தார் ஸ்டாலின். இவ்வளவு உலகமே பொருளாதாரத்தில் முடங்கிப் போய் இருந்த காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்பது மிகமிக முக்கியம்.
மூன்று ஆண்டுகள் முடியும் தருவாயில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார் முதல்வர். இந்த மாற்றங்கள் பற்றி இந்தியத் தொழிற்சங்கம் கூட்டமைப்பைச் சேர்ந்த கே.இ. ரகுநாதன் என்ன சொல்கிறார்?

"இந்த மாநாடு சில உலக நெருக்கடிகளைத் தாண்டி மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் சந்தித்த முதல் நெருக்கடி கொரோனா.
இந்தப் பெரும் தொற்று மிகப் பெரிய அளவில் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்தது. அதற்கு அடுத்து இரண்டு மிகப் பெரிய போர்கள். இந்தச் சவாலான காலகட்டத்தில்தான் தமிழ்நாடு அரசு இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய புதிய தொழில்கள்:
இதனால் கிடைத்த பலன் என்ன? தமிழ்நாடு கிட்டத்தட்ட 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. 27 லட்சம் வேலைவாய்ப்புகள் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதுவே முதல் வெற்றியாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி உள்ளது.

இன்றைக்கு புதிய புதிய தொழில்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். உலக அளவில் பல புதிய தொழில்கள் உருவாகி உள்ளன. ஃபைனான்சியல் செக்டர் என்கிறார்கள். ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்சி என்கிறார்கள். ரோபாடிக்ஸ் என்கிறார்கள். ஆட்டோமிஷன் என்கிறார்கள். இவி டெக்னாலஜி என்கிறார்கள். டிஃபன்ஸ் காரிடார் என்கிறார்கள். ட்ரோன் டெக்னாலஜி என்கிறார்கள்.
டேடா செண்டர்ஸ் என்கிறார்கள். Mobile phone manufacturing என்கிறார்கள். இப்படி புதுப் புது தொழில் வளங்கள், அறிவுத்திறன்கள், வெளிநாட்டுடன் போட்டிப் போடக்கூடிய வாய்ப்புகள் இன்றைக்குத் தமிழ்நாட்டிற்குள் வந்து குவிந்துள்ளன.
முதல்வர் ஸ்டாலினே 'இது சின்ன தொடக்கம்தான், வெறும் விதைதான். இன்னும் 7 ஆண்டுகளுக்கு 83லட்சம் கோடி அளவுக்கு ஜிடிபியின் மதிப்பு உயர வேண்டும். ஆண்டிற்கு 18% வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார். இந்த விதையே இன்றைக்கு இந்தியாவே பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு உள்ளது என்பதுதான் அதில் சிறப்பு.
6லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்:
இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்கள் என்று அழைக்கப்படுவார்கள், இந்தியாவில் மிகப் பெரிய தொழிலதிபர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் சென்னையை மையமிட்டு இருந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சின்ன அளவில் ஒரு தொழிலைத் தொடங்கி மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்தவர்கள் அதாவது ஜிகாஃபேக்ட்ரி என அழைக்கப்படுபவர்கள் சென்னையில் வந்து குவிந்தார்கள். இவை அத்தனைக்கும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தான் காரணம்.
மொத்தம் 3 ஆயிரம் தொழிலதிபர்கள் கூடி விவாதித்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். புதிய பாதைகளை வகுத்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் சிக்கி இருந்த தொழில்துறை இந்த மாநாடு மூலம் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது" என்கிறார்.
இவர் சொல்வது உண்மைதான். இந்த மாநாடு மூலம் மிகப் பெரிய முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறைய 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications