"டைம் ஓவர்".. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு செக்.. அனுமதி மறுத்தது போலீஸ்! ஜெ. ஸ்டைலில் ஸ்டாலினின் பெரிய மூவ்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பின்பாக இரண்டு விதமான மூவ்களை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த அனுமதிக்க கூடாது என்று கடந்த சில நாட்களாகவே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் சட்ட ஒழுங்கு கெடும் என்று பல்வேறு அமைப்புகள் விமர்சனங்களை வைத்து வந்தன.
ஆனால் தமிழ்நாடு அரசு இதில் முடிவு எதுவும் எடுக்காமல் இருந்தது. பேரணியை நடத்த வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கோரிக்கைக்கு ஆதரவாகவும் முடிவு எடுக்கவில்லை, அதற்கு எதிராகவும் முடிவு எடுக்காமல் இருந்தது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கைதான் தற்போது நடக்கும் சர்ச்சைகள் அனைத்திற்கும் காரணம்.

என்ன கோரிக்கை
இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் கோரிக்கை மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த அனுமதி வழங்கியது.

ஆர்எஸ்எஸ் பேரணி
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊர்வலத்தில் சாதி, மதம், தனி நபர் குறித்து தவறுதலாக பேச கூடாது. மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேச கூடாது. எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசவே கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாடு காவல்துறை இந்த அனுமதி பற்றி முடிவே எடுக்கவில்லை.

அனுமதி
28ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில், இன்று 29ம் தேதி ஆகியும் காவல்துறை சார்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பின்பாக இரண்டு விதமான மூவ்களை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதன்படி மொத்தமாக தமிழ்நாடு முழுக்க ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவு பிறப்பிக்காமல் மாவட்ட எஸ்.பி சார்பாக இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சட்ட ஒழுங்கு
சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதை அடிப்படையாக வைத்து மாவட்ட அளவில் எஸ்.பி சார்பாக ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது.

எங்கு எல்லாம் தடை
முதல் கட்டமாக திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வரும் நாட்களில் தடை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுத்தும் ஜெயலலிதா அதை அனுமதிக்கவில்லை. அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினும் இந்த முறை அனுமதி கொடுக்காமல் தடை செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. அதன்படியே தற்போது ஆர்.எஸ். எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் தடை ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications