"பிளான் இது.. சீக்ரெட்டா முடிங்க".. டெல்லி மேலிடம் போட்ட உத்தரவு.. டக்கென கண் விழித்த கதர்கட்சி
புதுவித அதிரடிகளை காங்கிரஸ் மேலிடம் கையில் எடுத்துள்ளது
சென்னை: டக்கென விழித்து கொண்டுவிட்டது காங்கிரஸ் கட்சி.. அதுவும் 5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு.. இதையடுத்து, அடுத்தடுத்த அதிரடிகளை அக்கட்சி கையில் எடுத்துள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி பிடித்துள்ளது.. தேர்தலுக்கு முந்தைய, மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே பெரும்பான்மையான வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கணிப்புகள் வெறும் யூகங்களே என்று கருதப்பட்ட நிலையில்தான், பாஜக வெற்றி கொடி நாட்டியது.. இத்தனைக்கும் உபியில் கடந்த ஒரு வருடமாகவே பிரியங்கா காந்தி முகாமிட்டு, பலவகைகளில் கடினமாக உழைத்தார்.. எனினும், காங்கிரஸ் மண்ணை கவ்வியதுடன், பாஜகவுக்கு டஃப் தரும் வகையில், ஆம் ஆத்மி உருவாகிவிட்டது.. அத்துடன் டெல்லி, பஞ்சாப் என காங்கிரஸ் கோட்டைகளையும் மெல்ல மெல்ல பிடித்து வருகிறது.

எச்சரிக்கை
இதையெல்லாம் பார்த்துதான் காங்கிரஸ் சோர்ந்து போய்விட்டது.. சில மாதங்களுக்கு முன்பே பரூக் அப்துல்லா, காங்கிரஸின் பலவீனத்தை பற்றி ஓபனாகவே பேசியிருந்தார்.. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துக்கிட்டு இருந்தால் வேலைக்கு ஆகாது, வெளியில் வரணும்" என்று அவர் எச்சரித்ததை மறுக்க முடியாது.. ஆனால், அக்கட்சி இப்போதுதான் சுதாரிக்கவே ஆரம்பித்துள்ளது.. பாஜகவுக்கு இணையான கட்டமைப்பு காங்கிரஸில் இல்லை என்பதை நேற்றுதான், சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
இப்படிப்பட்ட சூழலில்தான், புது தகவல்கள் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து கசிந்து வருகிறது.. 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு (காரிய கமிட்டி) கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார் சோனியா காந்தி... ஆனால், சோனியாவின் அந்த முடிவு காங்கிரஸ் தலைவர்களை பதற வைத்துவிட்டது.

பாஜக அசுர பலம்
"தேர்தல் தோல்விக்கு நீங்கள் காரணம் கிடையாது, 5 மாநிலத்திலும் நிலவிய கோஷ்டி பூசல்கள் தான்,.. அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தான்" என்றெல்லாம் சொல்லி அவரை சமாதானப்படுத்தினர்... அப்படியானால், 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று சோனியா காந்தி உத்தரவு போட்டுவிட்டார்.. ராஜினாமா அதிரடி இத்தோடு நின்று விடாதாம்... மற்ற மாநிலங்களிலும் இதே உத்தரவு பறக்கப் போகிறது என்கிறார்கள்.

தோல்விகள்
ஏனெனில், தேர்தல் தோல்விகளுக்கு பிறகு அவர்களை ராஜினாமா செய்யச் சொல்வதை விட, முன் கூட்டியே சீரமைப்பு நடவடிக்கைளை எடுத்தால் தான் தேர்தலில் தோல்வி இல்லாமல் இருக்கும் என்கிற யோசனைகள் சோனியாவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். அதனால், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குறித்த ஒரு ரிப்போர்ட் கார்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் ராகுல் காந்தி.

ரகசிய ரிப்போர்ட்
கடந்த 2 ஆண்டுகளில் சம்மந்தப்பட்ட தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கிறது? அவர்கள் குறித்து தலைமைக்கு வந்துள்ள புகார்கள் ஏன்ன? அந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? புகார்கள் எப்படி முடித்து வைக்கப்பட்டிருக்கிறது ? மாநில தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், அணுகுமுறைகள், ஆளும் கட்சியை (காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில்) எதிர்த்து இவர்களின் அரசியல் எந்த வகையில் இருக்கிறது? மக்களுக்கும் இவர்களுக்குமான தொடர்புகள் ? உள்ளிட்ட 12 கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள் மூலம் இந்த ரிப்போர்ட் கார்டினை ரகசியமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் ராகுல்.

சூர்ய நமஸ்காரம்
அந்த ரிப்போர்ட்டின்படி பலருக்கும் கல்தா கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.. இப்போதைக்கு காங்கிரஸ் சுறுசுறுப்பு அடைந்திருந்தாலும், அசுர பலம் கொண்ட பாஜகவை எதிர்கொள்ள ராகுலின் இந்த நடவடிக்கைகள் மட்டுமே போதுமா? அல்லது இன்னும் வேகம் தேவையா? அல்லது இதெல்லாம் கண்கெட்ட பின்னே சூர்ய நமஸ்காரமா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications