விஜயகாந்தை விட பவர் அதிகம்? திமுகவை கதிகலங்க வைத்த விஜய்? இவர் என்னங்க இப்படி சொல்கிறாரே!
சென்னை: விஜயகாந்துக்கு கூட இவ்வளவு ஆதரவு இல்லை. அவர் இருந்த போது கூட இந்த ஆதரவை பார்க்கவில்லை. விஜய்க்கு மக்களிடம் உள்ள ஆதரவு திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. திமுகவிற்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் திமுகவை வீழ்த்துவார் என்று சொல்லவில்லை, ஆனால் திமுக கடும் அச்சத்தில் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில், விஜய் ஏற்கனவே கோவையில் பிளான் போட்டு ரோடு ஷோ நடத்துகிறார். உடனே அங்கே உதயநிதி பயந்துகொண்டு ரோடு ஷோ நடத்துகிறார். திடீர் என்று உதயநிதி நடத்துகிறார். விஜய்க்கு மக்களிடம் உள்ள ஆதரவு திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. திமுகவிற்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆடிப்போய் உள்ளது.
விஜய்க்கு இருக்கும் ஆதரவு அப்படியே வாக்குகளாக மாறும் என்று சொல்லவில்லை. இந்த ஆதரவு வாக்குகளாக மாறலாம். மாறாமல் போகலாம். என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இந்த ஆதரவை பார்த்து திமுக பயந்துவிட்டது. இவ்வளவு ஆதரவு இருப்பதை பார்த்து திமுகவிற்கு அச்சம் உள்ளது.

விஜயகாந்துக்கு கூட இவ்வளவு ஆதரவு இல்லை. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அவருக்கு ஆதரவு இருந்தது. ஆனால் இந்த அளவிற்கு நான் பார்க்கவில்லை. அவர் இருந்த போது கூட இந்த ஆதரவை பார்க்கவில்லை. விஜய்க்கு மக்களிடம் உள்ள ஆதரவு திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. திமுகவிற்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் திமுகவை வீழ்த்துவார் என்று சொல்லவில்லை. திமுகவிற்கு எதிராக வெல்வார் என்று சொல்லவில்லை. திமுக வாக்குகளை அவர் உடைக்க போகிறார்.
இது திமுகவிற்கு தெரியும். அதனால்தான் திமுக அஞ்சுகிறது . விஜய் ரோடு ஷோ நடத்தியதும் உதயநிதி அதை பயன்படுத்திக்கொண்டு ரோடு ஷோ நடத்துகிறார். திடீர் என்று உதயநிதி நடத்துகிறார். திமுக எதிர் தரப்பு வாக்குகளை விஜய் உடைக்கிறார் என்று வாதம் வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் திமுக ஆதரவு வாக்குகளையும் அவர் உடைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
விஜய் கூட்டணி
இதற்கு இடையே அதிமுக - பாஜக அமைத்துள்ள கூட்டணியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை கொண்டு வருவதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாது., என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு!











Click it and Unblock the Notifications