10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. தமிழில் சதம் அடித்த திருச்செந்தூர் மாணவி.. எத்தனை பேர் சென்டம்?
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், தமிழ் மொழி பாடத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த மாணவி நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவை வெளியிட்டார்.
10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ஏராளமான மாணவர்கள் 100 மதிப்பெண்களையும் பெற்று அசத்தியுள்ளனர்.
அதில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 3,841 பேரும், கணிதத்தில் 2,186 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும், ஆங்கிலத்தில் 45 பேரும், தமிழ் பாடத்தில் ஒரே ஒருவரும் நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 100க்கு நூறு மதிப்பெண் பெறுவது எளிது கிடையாது. கணிதம் என்றால் விடையை சரியாக எழுதினால் 100 கிடைத்துவிடும். தமிழ் போன்ற மொழிப்பாடங்களில் அப்படி மதிப்பெண் எடுப்பது கஷ்டம். இலக்கணம், கையெழுத்து உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் தலையிடும் என்பதால் தமிழில் அபார காதல் இருந்தால்தான் இப்படி ஒரு சாதனை படைக்க முடியும்.
இப்படியான ஒரு மாணவிதான், துர்கா. இவர் திருச்செந்தூர் நகரிலுள்ள, காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் ஆகும். துர்கா 500க்கு 448 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் அதாவது செஞ்சுரி அடித்துள்ளார்.
மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர், பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications