சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ரூ.2000.. ஆகா.. இது சூப்பரா இருக்கே! எப்படி வாங்குவது தெரியுமா?
சென்னை: சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு பரிசு வழங்கும் நடைமுறை தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு பொருளை வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, நடப்பாண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகபட்சமாக பயணம் செய்த 30 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- என ரூ.60,000/- மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (14.07.2023) செனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையம் திரு.வி.க.பூங்காவில் நடைபெற்றது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி) முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வின் போது பிரபல பாடகர் திரு.எம்.ஜே.ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சியையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் வி.விஜயவரதன் (இயக்கம்), மேலாளர்கள் பி. லட்சுமி (வருவாய்), கே.எஸ்.அருண் (இயக்கம்) மற்றும் அல்தாப் உசேன் (இயக்கம்), மார்க் மெட்ரோ நிறுவனத்தின் இயக்குநர் வி.கே.இளங்குமணன், பொது மேலாளர் சீனிவாசன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகள் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இந்நிகழ்ச்சியினை கண்டு களித்தனர். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்துடன் ரூ.1063.37 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1063.37 கோடி ஒப்பந்தமானது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு ரூ.1063.37 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும்.
இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணவ் குமார் (தொழில்நுட்பம்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு).
கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே (சுரங்கப்பாதை), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்., என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications