சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு.. இ-பாஸ் கேட்டு எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது.. யாருக்கெல்லாம் அனுமதி?

Google Oneindia Tamil News

சென்னை: இ-பாஸ் மறுபடியும் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஊட்டி, கொடைக்கானல் உட்பட 5 கோடை வாசஸ்தலங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது திருமணத்திற்கும் இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்பட்டபோது, திருமணத்திற்கு செல்ல இ-பதிவு ஆப்ஷன் நீக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு இ-பதிவு தளத்தில் திருமணத்திற்கு பதிவு செய்ய ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திருமணங்களுக்கு செல்ல, இ-பதிவு செய்தால் போதாது. இ-பாஸ் அவசியம்.

எப்படி பதிவு செய்ய வேண்டும்

எப்படி பதிவு செய்ய வேண்டும்

மணப்பெண் அல்லது மணமகன், அல்லது அவர்களின் பெற்றோர், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். வேறு யாரும் விண்ணப்பிக்க முடியாது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தற்போது அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாவட்டங்களுக்கு இடையே திருமணத்திற்காக வாகனங்களில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியம். ஆம்.. சென்னையிலிருந்து ஒருவர் காஞ்சிபுரத்திற்கோ, செங்கல்பட்டுக்கோ, திருவள்ளூருக்கோ பயணிக்கவும், அதேபோல அந்த மாவட்டக்காரர்கள் சென்னைக்கு பயணிக்கவோ திருமணம் தவிர்த்த பிற காரணம் என்றால் இ-பதிவும், திருமணம் என்றால் இ-பாஸ்சும் அவசியம்.

50 பேருக்கு அனுமதி

50 பேருக்கு அனுமதி

திருமணத்தில் அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்படும். எனவே அதற்கு ஏற்பத்தான், இ-பாஸ் வழங்கப்படும். இஷ்டத்திற்கு எல்லாம் நிறைய பேர் இ-பாஸ் வாங்கிவிட முடியாது. தவிர்க்க முடியாத திருமணம் என்றால் மட்டுமே இ-பாஸ் கேட்டு விண்ணப்பியுங்கள். அல்லது போகாமல் இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

 இ-பாஸ் லிங்க்

இ-பாஸ் லிங்க்

இ-பாஸ் தேவைப்படுவோர்கள், இ-பதிவு செய்ய விரும்புவோர்கள், https://eregister.tnega.org/#/user/pass என்ற லிங்க்கை பயன்படுத்தலாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வீட்டு பொருட்கள்

வீட்டு பொருட்கள்

இன்னொரு சந்தேகம் பலருக்கும் எழுகிறது. ஓரிடத்தில் வீட்டை காலி செய்து இன்னொரு இடத்திற்கு பொருளை கொண்டு செல்ல வேண்டும். இதற்காக சரக்கு எடுத்துச் செல்லும் வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு இ-பாஸ் அல்லது பதிவு தேவையா என்பதுதான் அன்த சந்தேகம். ஆனால், சரக்கு வாகனங்களுக்கு எந்த பதிவும் தேவையில்லை என்பதால் உங்கள் பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை.

 சந்தேகங்கள்

சந்தேகங்கள்

கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு, 108/ 104 or 044-4612 2300/ 044 2538 4520 போன்ற ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவமனை படுக்கை வசதி தொடர்பான தகவல்களுக்கு https://stopcorona.tn.gov.in/beds.php என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.

English summary
How to apply an E pass for marriage in Tamil nadu: E-Pass has been re-introduced in Tamil Nadu. Previously e-Pass was introduced only for 5 summer residences including Ooty and Kodaikanal. Now the e-pass has been introduced for marriage as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X