பூத் சிலிப் இல்லாமல் வாக்களிக்க முடியுமா? ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? எளிய விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்-கள் வழங்கப்பட்டு இருக்கும். எனினும் தற்போது வரை பூத் சிலிப் கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் அதை ஆன்லைனின் டவுன்லோடு செய்வது எப்படி? என்ற விவரங்களை பார்க்காலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக பூத் ஸ்லிப்பை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu Election 2026 booth slip 2026

பூத் சிலிப் வரவில்லையா?

100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி விழிப்புணர்வு பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியும் கடந்த வாரமே தொடங்கி ஏறத்தாழ முடிந்துவிட்டன. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் வாக்குச்சாவடி எண், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி வரைபடம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும்.

சரி.. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் அதை ஆன்லைனின் டவுன்லோடு செய்வது எப்படி? என்ற விவரங்களை பார்க்கலாம். வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் 'பூத் சிலிப்புகளை பி.எல்.ஓ. அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, வீடு வீடாக சென்று பூத் லெவல் அலுவலர்கள் பூத் சிலிப்களை வழங்கினர்.

எப்படி டவுன்லோடு செய்வது?

எனினும், வெளியூரில் தங்கியிருப்பவர்கள் இன்று அல்லது நாளை சொந்த ஊருக்கு செல்பவர்கள் பூத் சிலிப் கிடைக்கவில்லையே என்ற கவலை பட வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே வெறும் 2 நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும். அதில் "Search in Electoral Roll" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் Search by EPIC, search by Details, Search by Mobile போன்ற ஆப்ஷன்கள் காட்டும். முதல் ஆப்ஷன் என்றால் வாக்காளர் அட்டை விவரங்களை உள்ளீடு செய்து டவுன்லோடு செய்யலாம்.

ECINET மொபைல் செயலி

search by Details-வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்த முடியும். உங்கள் பெயர், தந்தை/ கணவர் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்களை பதிவிட்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். மொபைல் எண் வழியாக என்றால் மொபைல் எண் பதிவிட்டு ஓடிபியை உள்ளீடு செய்து எடுத்துக்கொள்ள முடியும்.

எனினும், இதற்கு வாக்காளர் விவரங்களுடன் மொபைல் எண் கொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆப்ஷன் பயன்படும். அதேசமயம் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் கண்டிப்பாக வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, ECINET என்ற மொபைல் செயலியிலும் வாக்காளர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்களை பெற்றுக்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+