Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.20000 ஈஸியா சம்பாதிக்கலாம்.. தமிழ்நாடு அரசு சொன்ன ரூட்.. உடனே போனை போடுங்க.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் நிறுவனம் தங்களின் கிளைகளை தொடங்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழில்முனைவோர் ஆக விரும்பும் மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்து உள்ளது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்க ஆவின் நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களை ஈடுபடுத்த உள்ளது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் மார்க்கெட்டிங் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

aavin ration

இதற்காக பொது மேலாளர் (மார்க்கெட்டிங்), TCMPF லிமிடெட். இடம்: 3A Chamiers Road, Nandanam, Chennai 600035 தொலைபேசி எண்: 9790773955, 9444728505, 9444915453 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதில் ரூபாய் 2 லட்சம் முதலீடு செய்தால்.. மாதம் ரூ.20000 லாபம் மாதாந்திர ஸ்மார்ட் ரிட்டர்ன்ஸ் பெற முடியும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் ரேஷன்: இது போக விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரேஷனில் என்ன மாதிரியான ஆவின் பொருட்கள் கிடைக்கும் என்று விரைவில் லிஸ்ட் வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. 10 சதவிகித கடைகளில் மட்டுமே தற்போது தட்டுப்பாடு உள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நடவடிக்கை; தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.

இதற்காக இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+