வீட்டுக்கடன் சுமையினை எப்படி/எப்போது குறைக்கலாம்? வீட்டுக்கடன் வாங்கும் முன் செய்ய வேண்டியது?
சென்னை: வீட்டுக்கடன் சுமையினை எப்படி/எப்போது குறைக்கலாம்?, வீட்டுக்கடன் வாங்கும் போது செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல்களை இப்போது பார்ப்போம்.
வீட்டுக்கடன் வாங்கும் முன் செய்யவேண்டியது...
பெரும்பாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்கள், EMI தொகையினை குறைவாக வைக்க, நீண்ட கால (20-25 வருடங்கள்) கடன்களை தேர்ந்தெடுப்பார்கள். இதனால், EMI குறையுமென்றாலும், நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி அதிகமாகுமென்பதை மறந்துவிடாதீர்கள். ஆகையால், முடிந்த அளவிற்கு, கடன் செலுத்தும் காலத்தினை குறைவாக வைக்க முயலுங்கள்.

*உங்களால் முடிந்த அளவிற்கு அதிகமாக down-payment செலுத்துங்கள். எடுத்துக்காட்டாக, ₹50 லட்சம் கடன், 8% வட்டியில் எடுத்திருந்தால், உங்களது down-paymentல் ₹5 லட்சம் கூடுதலாக செலுத்தினால், வட்டியில் நீங்கள் ₹6 லட்சம் வரை சேமிக்கலாம்.
* வாங்கி அதிகாரிகள் எவ்வளவுதான் கட்டாயப் படுத்தினாலும், அவர்களிடம் இன்சூரன்ஸ் எடுத்து விடாதீர்கள். நீங்கள் வெளியே, அதைவிட குறைவான பிரீமியம் தொகையில் அதே அளவு coverage உள்ள பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால், உங்களுக்குப் பின்னர், இன்சூரன்ஸ் பணம் முழுக்க உங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இது, வங்கிகள் உங்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் முயற்சி. They wont need an insurance policy for a loan against collateral.
நினைவிருக்கட்டும் - இன்சூரன்ஸ் எடுக்கும்படி யாரும் உங்களை கட்டாயப் படுத்த முடியாது. Insurance is a subject matter of solicitation.
முதல் ஐந்து வருடங்கள்:
இந்த காலகட்டத்தில், உங்களது EMI ல் பெரும்பகுதி (70% - 89%) வட்டிக்கே செல்லும்.
* இந்த காலகட்டங்களில், உங்களுக்கு கிடைக்கும் போனஸ், கமிஷன், incentive போன்றவைகளை, principal repayment க்காக பயன்படுத்தினால், உங்களது வருங்கால வட்டித் தொகை வெகுவாக குறையும்.
* உங்கள் வருமானம் ஏற ஏற, உங்களது EMI தொகையையும் அதிகரியுங்கள். உதாரணமாக, நீங்கள் ₹40 லட்சம் கடன், 20 வருடங்களுக்கு, 7.5% வட்டியில் எடுத்திருந்தால், EMI தொகையில், ₹5,000 கூடுதலாக செலுத்தும்போது, 7 வருடங்களுக்கு முன்னதாகவே உங்களது கடன் முடிந்துவிடும். வட்டித் தொகையில் ₹8 லட்சம் சேமிக்கவும் முடியும்.
* வேறொரு வங்கியில் வீட்டுக்கடன் வட்டி குறைவாக இருந்தால் அந்த வங்கிக்கு உங்களது வீட்டுக்கடனை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும்போது, processing charges முதலானவற்றை கவனித்து வாங்கவும். Read the agreement fully. தேவையென்றால், ஒரு வழக்குரைஞரின் உதவியை நாடுங்கள்.
ஆறு முதல் பத்து வருடங்கள்:
இந்த காலகட்டத்தில், உங்களது EMI தொகையில் சுமார் 70% அசலாக இருக்கும்.
* இந்த காலகட்டத்தில், பெரும்பாலான வட்டித் தொகையினை, வங்கிகள் உங்களிடமிருந்து வசூலித்திருக்கும். ஆகையால், pre-payment செய்வது, தற்போது உங்களுக்கு லாபமில்லாத ஒரு செயல். உங்களிடம் இருக்கும் கூடுதலான பணத்தை நீங்கள் வேறெங்கிலுமாவது முதலீடு செய்யலாம். அப்படி pre-payment செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதே தொகையினை வேறெங்கிலும் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் வருமென்பதை கணித்து, அதோடு உங்கள் வீட்டுக்கடன் வட்டி சேமிப்பினை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகு சரியான முடிவை தேர்ந்தெடுக்கவும்.
* இந்த சமயத்தில், வருமான வரி விலக்கினால், உங்களது வட்டித் தொகையில், வெறும் 2.8% மட்டுமே சேமிப்பாக இருக்கும். இதைவிட கூடுதலாக வருமானம் தரும் வழிகளில் உங்களது முதலீடுகளை நீங்கள் செய்யலாம்.
* நீங்கள் ஓரளவிற்கு ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், சந்தை சார்ந்த முதலீடுகளில் (நல்ல நிறுவனங்களின் பங்குகள் / Mutual Funds) உங்கள் பணத்தை போடலாம். தயவு செய்து பங்குச்சந்தை டிரேடிங் போன்ற முறைகளை தவிருங்கள். அது உங்கள் பணத்திற்கும், மனத்திற்கும் நல்லது.
வீட்டுக்கடன் சுமையினை எப்படி/எப்போது குறைக்கலாம்?
— K. RAJESH (@rajeshkmoorthy) July 23, 2023
1⃣ வீட்டுக்கடன் வாங்கும் முன் செய்யவேண்டியது...
You are entering into a long-term financial committment. இப்பொழுதே சரியானவற்றை தேர்வு செய்வது சிறந்தது.
🔹பெரும்பாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்கள், EMI தொகையினை குறைவாக வைக்க,… pic.twitter.com/zIw9txQC2W
பதினோரு வருடங்களுக்கு மேல்:
தற்போது உங்களது EMI தொகையில் சுமார் 80% க்கும் மேல் அசலாக இருக்கும்.
* இந்த சமயத்தில் pre-payment என்பது கூடவே கூடாது. இப்படி செய்தால், வங்கிக்கு தான் லாபம். ஆகவே, செய்யவே செய்யாதீர்கள்.
* பணத்தை விட மேலான ஒரு பயன் (மன அமைதி, சீக்கிரம் கடனை அடைத்தால் நிம்மதி போன்றவை) இருந்தால் மட்டுமே இந்த காலகட்டங்களில் pre-payment செய்யவும். அவ்வாறு இல்லையென்றால், உங்களது பணத்தினை, நல்ல வருமானம் தரும் முதலீடுகளில் போடவும்." இவ்வாறு பொருளாதார நிபுணர் ராஜேஷ் கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications