"பவர்" கைமாறுதா? இதுதான் பாஜக.. தேனியில் வேர்விட்ட தாமரை.. ஓபிஎஸ்ஸே இதை எதிர்பார்க்கல.. அப்ப திமுக?
சென்னை: பாஜகவின் தேர்தல் வியூகம் வேகம் எடுத்து வருகிறது. அந்தவகையில் முக்கிய தகவல் ஒன்று கூட்டணி குறித்து கசிந்து கொண்டிருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரை, தென்மாவட்டத்தில் மிகப்பெரிய பிளான்களை கையில் எடுத்துள்ளது.. தேவேந்திர குல வேளாளர்கள் + இந்து நாடார்கள் ஓட்டுக்கள் தங்களுக்கு கணிசமாக இருப்பதாக தமிழக பாஜக நம்புகிறது. இது தொடர்பான டேட்டாவையும் மாநில தலைவர் தன்னுடைய கைவசம் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

தினகரன்: மற்றொருபக்கம் முக்குலத்தோர் வாக்குகளுக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் டீமை அதிகமாகவே நம்பியிருக்கிறது.. அதனால்தான் ஓபிஎஸ்ஸுக்கு 3 சீட், தினகரனுக்கு 2 சீட்டுகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டதாக தகவல்கள் கசிந்தன.
இதில், தேனி தொகுதியை பொறுத்தவரை, உள்ளடக்கிய பகுதிகளில் டிடிவி தினகரனுக்கும் செல்வாக்கு அதிகம் உள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கும் செல்வாக்கு அதிகமாக உள்ளதால், பாஜக யாருக்கு ஒதுக்க போகிறது என்று தெரியவில்லை. அந்தவகையில் எதிர்பார்த்த தொகுதி தினகரனுக்கு கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தானாம். எனவே, ஓபிஎஸ் மகனுக்கே தேனியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றார்கள்.
பன்னீர்செல்வம்: அப்படியே தேனியில் போட்டியிட்டாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது என்றும், தாமரை சின்னத்திலேயே தேர்தலை ஓபிஎஸ் சந்திக்க வேண்டிவரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். ஆக சின்னம் விவகாரத்தில் இன்னும் குழப்பத்தில்தான் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தொகுதி விவகாரமும் புது சிக்கலை தந்துள்ளதாம்.
அதாவது, ஓபிஎஸ் மகனுக்குதான் தேனியை ஒதுக்க முடிவாகியிருந்தது. ஆனால், திடுதிப்பென்று தன்னுடைய முடிவை பாஜக மாற்றி யோசிக்கிறதாம். அந்தவகையில், ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதிலாக, ஓபிஎஸ்ஸே நேரடியாக தேனியில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறதாம் பாஜக.
தென்மண்டலம்: இதற்கு காரணம், ஓபிஆர் மீது ஏற்கனவே பெண் விவகாரம் உள்ளிட்ட சில விவகாரங்கள் அடிபட்டன. இந்த விவகாரங்களில் உண்மைத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால், ஓபிஆர் மீதான டேமேஜ் தேனி தொகுதியில் படர்ந்துள்ளதாம்..
அதுமட்டுமல்ல, இப்போதைக்கு பாஜகவில் வலுவான கூட்டணி எதுவுமே அமையவில்லை. தென்மண்டலத்தில் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டுமானால், பலம் வாய்ந்த வேட்பாளரை மட்டுமே களமிறக்கும் சூழல் உள்ளது. அதனால்தான், பேசாமல் நீங்களே தேனியில் நில்லுங்களேன் என்று பாஜக ஓபிஎஸ்ஸிடம் சொல்கிறதாம்.
என்ன முடிவு: ஒருவேளை, ஓபிஎஸ் தேனியில் போட்டியிட்டால், நிச்சயம் ஒரு சீட்டை பெற்றுவிடலாம் என்றும் பாஜக கணக்கு போடுகிறதாம். ஆனால், ஓபிஎஸ் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்று தெரியவில்லை..
இப்பவே சட்டசபையில் பின்சீட்டில் உட்கார வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டதால், சட்டசபை பக்கம் செல்வதைவிட, டெல்லி பக்கமே செல்லலாம் என்றுகூட நினைக்கிறாராம். எனவே, பாஜகவின் இந்த யோசனைக்கு, அநேகமாக பச்சைக்கொடி காட்டவே வாய்ப்பு நிறைய உள்ளதாம்.
திமுக: இதில், திமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.. தேனியில் ஏற்கனவே உள்கட்சி பூசல் நிலவுகிறது.. திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதாகவும் பூசல்கள் வெடித்தபடி வருகின்றன.. பலர் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.. அதைவிட முக்கியமாக, எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications