நான் அதிமுககாரன் தான் ஆனால்.. விஜய் முகத்துக்கு நேராக மாணவியின் தந்தை சொன்ன வார்த்தை
சென்னை: 4 வது கட்டமாக இன்று விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மாணவி ஒருவரின் தந்தை நான் அதிமுக உறுப்பினர் தான் என்றும், இருந்தாலும் மனிதாபிமானம் இருக்கிறது.. விஜய் தான் வருங்கால முதல்வர்.. அவரை பார்த்த ஒன்று போதும்.. வேறு சந்தோஷம் இல்லை என்று நெகிழ்ச்சிப்பட பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் மற்றும் புதுவையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தொகுதிகள் வாரியாக தேர்வு செய்து ஊக்குவித்து பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறார். நேரில் அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி வருகிறார்.

விஜய் கல்வி விருது விழா
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலமாக மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார். நடப்பு ஆண்டில் முதல் கட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக கடந்த 4 ஆம் தேதி மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கினார்.
இதன்பின்னர் கடந்த 3 ஆம் கட்டமாக நேற்று முன் தினம் மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் பரிசுகளை விஜய் வழங்கினார். இதனை தொடர்ந்து இறுதியாக 4 ஆம் கட்டமாக மாணவ மாணவிகளுக்கு இன்று விஜய்யின் பரிசளிப்பு மற்றும் கல்வி விருது விழா நடந்தது. இன்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது,.
நான் அதிமுக உறுப்பினர்
இன்றைய பரிசளிப்பு விழாவில் தமிழகத்தின் 39 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 246 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், சென்னை, மதுரை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
வழக்கம் போல் விஜய் ஒவ்வொரு மாணவ - மாணவிகளையும் தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இதில் பங்கேற்ற மாணவி ஒருவரின் தந்தை, விஜய்யை புகழ்ந்து பேசினார். மேலும் விஜய்யை வருங்கால முதலமைச்சர் என்றும், நான் அதிமுக உறுப்பினராக இருக்கிறேன் என்றும் கூறினார். அந்த மாணவியின் தந்தை கூறியதாவது:-
நான் மாற்றுக் கட்சி உறுப்பினர். அதிமுக உறுப்பினர். இருந்தாலும் மனிதாபிமானம் முக்கியம். வருங்கால முதலமைச்சர் விஜய்யை பார்த்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதைவிட எனக்கு சந்தோஷம் எதுவுமே இல்லை.. இவ்வாறு அவர் கூறினார்.
வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்த மாணவி
இதேபோல் இன்னொரு மாணவி தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அந்த மாணவி பேசுகையில், "ஒத்து சீட்டுக்கு அழைகின்றவங்க.. எங்களை 2 கிராம் தங்கத்து நாங்க இங்க வாரோம் என்று பிற்போக்குத்தனமாக சொல்கிறவங்க.. எல்லாத்துக்கும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கொள்கிறேன்.
எங்கள் தலைவருக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் உள்ள உறவு தாய்மாமன் உறவு.. தாய்க்கே இல்லாத உரிமை கூட தாய்மாமனுக்கு உண்டு.. சில புரியாத தற்குறிகளுக்கு இது தெரியாது. புரியும்.. நாளை எதிர்காலம் நீங்கள் தான்.. உங்களை பின்பற்றுபவர்கள் நாங்கள் என்று ஒரு மாணவி வேல்முருகன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications