சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2006 ல் வருவாய் துறை.. 2021 இல் கூட்டுறவு துறை.. அதிக வாக்குகளில் வென்ற ஐ பெரியசாமிக்கு சூப்பர் துறை

Google Oneindia Tamil News

சென்னை: ஆத்தூர் சட்டசபைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் மூத்த தலைவர் ஐ பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 155 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் நாளை ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கொள்கிறார்.

ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்! ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்!

முன்னதாக திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். அவருக்கு ஆட்சி அமைக்க ஸ்டாலின் நேற்று மாலை அழைத்திருந்தார்.

கூட்டுறவுத் துறை

கூட்டுறவுத் துறை

இதனால் யார் யாருக்கு எந்தெந்த துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அமைச்சரவை பட்டியல் வெளியானது. இதில் ஆத்தூர் சட்டசபைத் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற ஐ பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் தொகுதி

ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் லோக்சபைக்குள்பட்ட ஆத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாகும். இங்கு 9 முறை திமுக வென்றுள்ளது. திமுகவின் மூத்த தலைவரான ஐ பெரியசாமி இதுவரை இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

ஐ பெரியசாமி

ஐ பெரியசாமி

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 6ஆவது முறையாக வென்றுள்ளது. இவர் இந்த தேர்தலில் 1,65,809 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சத்யபாமா 30,238 வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ பெரியசாமி வென்றுள்ளார்.

எம்எல்ஏ

எம்எல்ஏ

இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்தனர். இவர் கடந்த திமுக ஆட்சியில் வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகன் ஐ பி செந்தில் குமாருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் பழனி தொகுதி எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
I Periyasamy gets Cooperative portfolio in DMK cabinet. He has won the election with high vote difference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X