எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க முடியாமல் போச்சே.. பலம் தெரிஞ்சிருக்குமே.. இப்போ முடியலியே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என்றால் அவருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் தான் என்ன என்பதை அறிய அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மருத்துவமனையில் அட்மிட் ஆகி அந்தக் கூட்டத்தையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

 ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல்

நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் வெடித்துள்ள பிரளயத்துக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.க்களால் ஏக மனதாக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவலும் வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்


இப்படிப்பட்ட சூழலில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்றால், அங்கு என்ன மாதிரியான நிகழ்வுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே நாம் இது தொடர்பாக விசாரித்ததில், ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை மோசமாகவில்லை என்ற தகவல் கிடைத்தது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

லேசான காய்ச்சலும்உடல் வலி மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்ததாகவும் அதுவும் இடைவிடாது ஆதரவாளர்கள் சந்திப்பு தூக்கமின்மையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதுகு வலி ஒன்று தான் அவரை அவஸ்தைபட வைக்கிறது என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பிவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனோஜ் பாண்டியன்

மனோஜ் பாண்டியன்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழலில் அவருடைய தரப்பில் இருந்து மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் வசம் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி மீது கை வைத்தால் அதை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய சட்டப்போராட்டங்கள் பற்றியும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தி வருறார் மனோஜ்பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+