சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசு அதிகரித்து ரூ.97.43க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று முன்தினம், பெட்ரோல், லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று பெட்ரோல் விலை 25 பைசா உயர்ந்துள்ளது. டீசல் விலை 27 பைசா உயர்ந்துள்ளது.

இதையடுத்து, நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.19க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை உயர்வு காரணமாக கட்டுமான பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தபடி உள்ளது.

In Chennai, the price of a liter of petrol touched Rs 97.43

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசு அதிகரித்து ரூ.97.43க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 22 காசு அதிகரித்து 91.64க்கு விற்பனையாகிறது.

கொரோனா 2வது அலையால்.. பெட்ரோல் -டீசல் நுகர்வு 25% குறைவு.. ஆனால் விலையோ ஜெட் வேகம்.. முழு விவரம்! கொரோனா 2வது அலையால்.. பெட்ரோல் -டீசல் நுகர்வு 25% குறைவு.. ஆனால் விலையோ ஜெட் வேகம்.. முழு விவரம்!

பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள், சொந்தமாக கார் வைத்திருப்போர் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவீனம் ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. இதை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுக்க காங்கிரஸ் நேற்று போராட்டம் நடத்திய நிலையிலும், விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

English summary
In Chennai, the price of a liter of petrol has crossed Rs 97.43, up 24 paise per liter today. Diesel prices have also risen sharply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X