எந்த இடத்திலும் 'மத்திய அரசு' இல்லை.. எல்லாம் 'ஒன்றிய அரசு'தான்.. ஆளுநர் உரை உணர்த்துவது என்ன
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரையில், அனைத்து இடங்களிலும் மத்திய அரசு என்ற வார்த்தைக்குப் பதில் ஒன்றிய அரசு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இந்த உரையில் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
ஆளுநர் உரையை ஒரு சாரர் வரவேற்று வருகின்றனர். அதேபோல அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரையை விமர்சித்து வருகின்றனர்.

திமுக
மத்திய அரசும் திமுகவும் பல விஷயங்களில் நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா முதல் ஜிஎஸ்டி வரை மத்திய அரசின் முடிவுகளில் பலவற்றுக்கு திமுக எதிர்ப்பே தெரிவித்து வந்துள்ளது. முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, பின்னர் ஆட்சி அமைந்தவுடனும் சரி பல சந்தர்ப்பங்களில் மத்திய அரசுக்கு எதிராகவே திமுக கருத்து தெரிவித்திருந்தது.

Array
இந்தப் பட்டியலில் மத்திய அரசு & ஒன்றிய அரசு விவகாரமும் சேர்ந்துவிட்டது. திமுக அமைச்சர்கள் அனைவரும் மோடி தலைமையிலான அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சட்டப்படி ஒன்றிய அரசு என்பதே சரி என்றும் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய கூட்டாட்சி தத்துவத்தின்படி ஒன்றிய அரசு என்று அழைப்பதே சரி என்றும் திமுக சார்புடையவர்கள் முன்வைக்கின்றனர்.

எல் முருகன்
ஆனால், இதனை பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் எல் முருகன், ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுக் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தார். மேலும், ஒன்றிய அரசு என்றால் என்ன என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை என்று கூறியதாலேயே அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தி நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆளுநர் உரை
அதாவது பாஜகவின் நிலைப்பாடு இதில் மிகவும் தெளிவானது. ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை பாஜக விரும்பவில்லை. அதேநேரம் தேசியளவில் இதற்கு எந்தவொரு முக்கிய பாஜக தலைவரும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் தான் இன்று தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது.

ஒன்றிய அரசு தான்
இன்று ஆளுநர் ஆற்றிய உரையில், அனைத்து இடங்களிலும் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுப் பேசினார். இதனை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆளுநர் உரையில் எந்தவொரு இடத்தில் மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை. அனைத்து இடங்களிலும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, இந்த விஷயத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதையே இது தெளிவாக உணர்த்துகிறது.

உறவுக்குக் கை கொடுப்போம்
இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையில், வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும் என்றும் இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார். அதேநேரம் அதே நேரத்தில், 'உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போதியளவில் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்ட ஆளுநர், இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும் என்றும் கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும் என்றும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications