மழைக்காலத்தில் கரண்ட் மட்டுமல்ல..தக்காளியும் ‘ஷாக்’ அடிக்கும் போலயே! இவ்வளவு விலை அதிகமா? கஷ்டம்தான்!
சென்னை: தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையான தக்காளி விலை, தற்போது ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில், காய்கறிகள் வருகின்றன. தினமும் 80 வாகனங்கள் மூலம் 1200 டன் தக்காளி கொண்டு வரப்படுகின்றன.
சந்தையில் ஏறத்தாழ 1,985 மொத்த விற்பனையாளர்கள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் 3,941 கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

தொடர் மழை - வரத்து குறைவு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல், திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது பெய்து வரும் மழையால், தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 90 வாகனங்களில் தக்காளி இறக்குமதி செய்யப்படும். தற்போது தொடர் மழை காரணமாக 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது.

கிடுகிடுவென விலை உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால், விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.40-க்கு விற்பனையானது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கடைகளில் தக்காளியின் விலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் உயரும்
அண்டை மாநிலங்களில் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கோயம்பேடு வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களில் மழை மேலும் நீடித்தால், உற்பத்தி குறைந்து அனைத்து காய்கறிகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30-க்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் தக்காளியின் விலை உயர்ந்த நிலையில், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிக்க கூடுமோ என இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications