டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை.. எச்சரித்த இந்திய மருத்துவ இணை இயக்குநர்
சென்னை: பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என மருத்துவத்திற்கு எதிரான தகவல்களை கொடுத்த டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியபதி இணை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவர் டெய்சி மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவருக்கு இரு மகள்கள். அதில் ஒருவர்தான் சித்த மருத்துவர் டாக்டர் ஷர்மிகா.
இவர் தனது யூடியூப்பில் மருத்துவக் குறிப்புகளை கூறி வருகிறார். இதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். இவர் பொறுமையாக சொல்வதால் இவரது சேனலை பலர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இவர் தற்போது வைரலாகி வருகிறார்.

சர்ச்சைக்குரிய வகையில்
இவர் அண்மையில் அளித்த பேட்டிகள் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துவிட்டன. அவரது பேட்டியில், எடையை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு 3 கிலோ எடை குறைந்தால் கூட பின்னர் ஒரே ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும் என தெரிவித்துள்ளார்.

அயோடின் உப்பு வேண்டாம்
பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்தக் கூடாது. தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது. எனவே நம்மை விட பெரிய விலங்கான மாட்டுக் கறியை சாப்பிடக் கூடாது. குழந்தை பிறப்பது கடவுள் கிருபைதான். இதில் எந்த வித சயின்ஸும் இல்லை. கணவன் மனைவி சேர்வதால் மட்டும் குழந்தை பிறந்துவிடாது என்றெல்லாம் பேசியிருந்தார்.

சித்த மருத்துவர்
இப்படி சித்த மருத்துவர் என்ற பெயரில் ஷர்மிகா மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பு வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், ஷர்மிதா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக சமூக ஊடகங்களில் கருத்துகளை சொல்ல எந்த தடையும் இல்லை.

மருத்துவ விதிகள்
ஆனால் அவர் மருத்துவ விதிகளின்படி தவறான கருத்தை பரப்பக் கூடாது. அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக் கறி மட்டுமல்லாமல் எந்த இறைச்சியையும் சாப்பிடக் கூடாது என குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைப்படுகிறதோ அது சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அவர்கள் விருப்பப்படி சாப்பிடலாம்.

ஷர்மிகாவிடம் ஆதாரம் இல்லை
ஷர்மிகா சொல்வதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போல் பேசுகிறார். ஒரு மருத்துவர் மருத்துவ ரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்ல வேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு சொல்லக் கூடாது. குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு மருத்துவ ரீதியில் எந்த ஆதாரமும் இல்லை.

மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசும் ஷர்மிகா குறித்து பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்து கொள்வது கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவர்களை நாட வேண்டும். தமிழகத்தில் 1541 இந்திய மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications