சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கன மழை ஹை அலர்ட்.. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 25ம் தேதி மாலை முதல் சனிக்கிழமை வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    TN Weather: Heavy rain expected in South of Tamilnadu and Delta | OneIndia Tamil

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை அருகே நெருங்க கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம் ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம்

    சென்னை வானிலை மையம்

    சென்னை வானிலை மையம்

    இதுகுறித்து நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 23, 24 தேதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

    கன மழை பெய்யும்

    கன மழை பெய்யும்

    வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பலத்த காற்று

    பலத்த காற்று

    இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில், நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி முதல் வரும் சனிக்கிழமை வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆரஞ்ச் அலர்ட்

    ஆரஞ்ச் அலர்ட்

    வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் 6 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் இப்படியான அலர்ட் விடுக்கப்படும். ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கும் போது மக்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Indian Meteorological Department has issued an orange warning for heavy to very heavy rains in Tamil Nadu from November 25h evening to Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X