பெரும் மாற்றத்தை சந்திக்க போகும் பெட்ரோல் நிலையங்கள்.. ஐஓசி இயக்குநர் முக்கிய தகவல்!
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்-கள் விரைவில் மின்சாரம், திரவ, இயற்கை எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பும் வகையில், பல எரிபொருள் விற்பனை நிலையங்களாக மாற்றப்பட உள்ளது என ஐஓசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) எஸ்.எஸ்.வி.ராமகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, மின்சார வாகனங்கள், எல்என்ஜி, பிஎன்ஜி, சிஎன்ஜிஆகிய திரவ, இயற்கை எரிவாயுவால் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு எரிபொருள் (பல எரிபொருள்கள்) நிரப்புவதற்கான விற்பனை மையங்களாக மாற்றப்படும் என்று கூறினார்.
மேலும் இதுபற்றி ஐஓசி இயக்குநர் ரவிக்குமார் கூறும் போது, வாகன என்ஜின்கள் அடுத்த 4 வருடங்களில் சந்திக்க போகும் மாற்றங்களை பற்றியும் பேசினார்.

கரும்பு மக்காசோளம்
அதாவது "கரும்பு, மக்காசோளம், நெல், பருத்தி ஆகியவற்றின் சக்கைகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்வது வரும் 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அதற்கு ஏற்ற வகையில், தரமான இன்ஜின்களைத் தயாரிக்குமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

ஐஓசி இயக்குனர்
எரிபொருள்களை சுத்திகரிப்பு செய்வதற்காக, பானிபட் மற்றும்பாரதீப் நகரங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஐஓசி இயக்குனர், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குதி செலவைக் குறைக்கவும், மாற்று எரிசக்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக விளக்கம் அளித்தார்.

மத்திய அரசு
சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, இந்தியாவில் காஸ் சிலிண்டரை 90 சதவீதம் மக்கள் பயன்படுத்துகின்றனர். 90 சதவீதம் மக்கள் பயன்படுத்தும் எரிவாயுவில் 50 சதவீதம் அளவு தான் இந்தியா உற்பத்தி செய்கிறது. மற்ற 50 சதவீதம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது, இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், அதற்கேற்ப உள்நாட்டில் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது என்றும் , சிலிண்டர் விலை உயர்வுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்பல்ல என்றும் கூறினார். அத்துடன், சிலிண்டருக்கான மானியத்தையும் மத்திய அரசு குறைத்து விட்டதாகவும் ஐஓசி இயக்குனர் ராமகுமார் கூறினார்.

மாற்றம் வரும்
வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதேபோல் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்தாலும் அதை ஏற்கும் வகையில் பெட்ரோல் வாகன என்ஜின்கள் வடிவமைக்கப்பட உள்ளன. எனவே அனைத்து வாகனங்களும் வருங்காலங்களில் ஒரே பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் நிரப்பலாம், காஸ் பில் பண்ணலாம் அதேநேரம் பேட்டரிகளை சார்ஜ் போடலாம் என்ற நிலை வரப்போகிறது.

வாகனங்கள்
இதனிடையே கடந்த 2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பிஎஸ்-6 முறை அமலுக்கு வந்துள்ளதால், உலகின் தரம் மிகுந்த எரிபொருளை பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறி உள்ளது. பிஎஸ் -4 ரக எஞ்சின் கொண்ட பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்கள் பிஎஸ்-6 வகைக்கான எரிபொருளை பயன்படுத்த முடிகிறது.












Click it and Unblock the Notifications