என்ன இதுதான் கடைசி ஏலமா? ஒரே குடும்பமாக இருந்தாலும்.. துணிந்து முடிவு எடுக்கும் சிஎஸ்கே- செம மாற்றம்
சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களை களமிறக்கும் முடிவில் உள்ளது. பல்வேறு கட்டாயத்தின் பெயரில் சிஎஸ்கே அணி இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
2022 ஐபிஎல் தொடரின் ரிடென்ஷன் இன்று நடக்க உள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்கள் வரை அடுத்த சீசனுக்காக தக்க வைக்க முடியும்.
மற்ற வீரர்களை அணிகள் ஏலத்திற்கு விட வேண்டும். இதற்கான உத்தேச பட்டியல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இன்று எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற முழு விபரம் வெளியாகும்.
நேற்று வந்த சின்ன பையனுக்காக.. சிஎஸ்கே துணிச்சலாக எடுத்த முடிவு.. தோனி தந்த சிக்னல்.. மாறும் டீம்!

முழு விபரம்
இதில் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை மட்டுமே தக்க வைக்கும் என்று தகவல்கள் வருகின்றன. கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி போன்ற இளம் வீரர்களை தக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது. மும்பை அணி ரோஹித், பொல்லார்ட், பும்ராவை தக்க வைக்கும் என்கிறார்கள். பெங்களூர் அணி மேக்ஸ்வெல், கோலி, சாஹலை தக்க வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்பு
சிஎஸ்கே அணி தோனி, ஜடேஜா, ருத்துராஜ், மொயின் அலி ஆகியோரை தக்க வைக்க உள்ளது. மொயின் அலி ஆல் ரவுண்டர். இவரை எந்த பேட்டிங் ஆர்டரிலும் களமிறக்கலாம். சிறப்பாக பவுலிங் செய்ய கூடியவர். இவரை ஏலத்தில் விட்டால் எடுக்க முடியாது. இதனால் அவரையும், ஜடேஜாவையும் சிஎஸ்கே ரீடெயின் செய்கிறது.

ருத்துராஜ்
ருத்துராஜ் சிஎஸ்கே அணியின் எதிர்காலம் என்பதால் அவரை அணி நிர்வாகம் வெளியே விடும் முடிவில் இல்லை. மற்றபடி தோனி குறைந்த விலைக்கு ரீடெயின் செய்யப்பட உள்ளார். இந்த நிலையில் 2022க்கு பின் ஐபிஎல்லில் பெரிய ஏலம் இருக்காது. சமயத்தில் ஏலமே இருக்காது என்கிறார்கள். ஏலம் இன்றி வீரர்களை கால் பந்து லீக் ஆட்டங்கள் போல வாங்கும் முறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

அணி
அதாவது 2022ல் உருவாக்கப்படும் கோர் அணிகள் அப்படியே இருக்கும். அதில் வீரர்களை மாற்ற வேண்டும் என்றால் ஏலம் நடத்தாமல் வெளியே டீலிங் மூலமும், பேச்சுவார்த்தை மூலமும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். மினி ஏலமும் நடக்க வாய்ப்பு குறைவு என்றே கூறுகிறார்கள். இதனால் சிஎஸ்கே அணி முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்க போகிறது.

நீக்கம்
ஏலம் இனி பெரிதாக நடக்காது என்பதால் வயதான வீரர்களை சிஎஸ்கே ரீடெயின் செய்யாது. அதாவது சிஎஸ்கே அணி இந்த சீசனில் ரெய்னா, ராயுடு, டு பிளசிஸ், பிராவோ போன்ற மூத்த வீரர்களை எடுக்காது. மாறாக அவர்களை எடுத்தாலும் ஏலத்தில் குறைவான விலைக்கு எடுத்துவிட்டு மாற்று வீரர்களாக இளம் வீரர்களை சிஎஸ்கே எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

இளம் வீரர்
இந்த ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள்தான் அடுத்த 5-6 வருடம் சிஎஸ்கேவில் ஆடுவார்கள். இதனால் சிஎஸ்கே அதற்கு ஏற்றபடி இளம் வீரர்களை எடுக்கும். சிஎஸ்கே அணி வீரர்கள் ஒரே குடும்பமாக இருந்தாலும் கூட அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணி இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரெய்னா, ராயுடு, டு பிளசிஸ், பிராவோ போன்றவர்கள் ரீடெயின் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.