ரெடியான பிளான்.. சசிகலாவுக்கு செக்?.. எடப்பாடியின் அடுத்த அதிரடி.. அதிமுகவே படுபிஸி.. காரணம் இதுதான்
அதிமுகவில் 3ம் கட்ட உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அதிமுகவில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி பரபரப்பாக காணப்படுகிறது.
சட்டசபை தேர்தல், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி என மொத்த தேர்தலிலும் மண்ணை கவ்விக் கொண்டுவிட்டது அதிமுக.
மற்றொரு புறம் சசிகலாவின் எழுச்சியும் வேகம் எடுத்து வருவதால், மிகப்பெரிய நெருக்கடிக்கு அதிமுக ஆளாகி வருகிறது.. அதனால், சசிகலாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், அதிமுகவின் பலத்தை நிரூபிக்கவும், உட்கட்சி தேர்தல் என்ற அஸ்திரத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பே கையில் எடுத்தது அதிமுக..

நிர்வாகிகள்
அரசியல் கட்சிகள் 5 வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி... அந்த வகையில், உட்கட்சி தேர்தலை இந்த மாதத்திற்குள் முடித்து, அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்டிவிடலாம் என்பதே அதிமுக மேலிட தலைவர்களின் திட்டமாக இருந்தது.. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

அஸ்திரம்
தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும், கிளை செயலர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி, ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மட்டும் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது.. இதைதான் சசிகலாவுக்கு எதிரான அஸ்திரமாகவும் பயன்படுத்தி கொள்ளவும் அதிமுக யோசிக்கிறது.. அந்த வகையில், அதிமுகவில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் அறிவிப்பு
உட்கட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிந்தவிட்டது.. இப்போது 3-ம் கட்டமாக, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது... ஒன்றியம், நகரம், பேரூராட்சி செயலர் பதவிக்கு, 5,000; மற்ற பதவிகளுக்கு, 2,000 ரூபாய் கட்டணம். பகுதி செயலர் பதவிக்கு, 5,000 ரூபாய், பகுதியில் மற்ற பதவிகளுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வரும், 27ம் தேதி, 25 மாவட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடக்க உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. இதையடுத்து அதிமுக கூடாரம் மும்முரமாக காணப்படுகிறது.. தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்து, சசிகலாவின் திட்டங்களை முறியடிக்க எடப்பாடி டீம் தயாராக காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. ஆனால், ஓபிஎஸ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியாமல், மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு குழம்பி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications