உடனே மாத்துங்க.. செக் பண்ண மாட்டீங்களா? ரெய்டு விட்ட டெல்லி.. பாஜகவிற்குள் நடந்த பரபர சம்பவம்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் நடந்த சம்பவம் ஒன்றில் தேசிய தலைமை நிர்வாகிகள் பற்றி தெரிய வந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2024 லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு பாஜகவில் தற்போது பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பூத்தை வலிமை படுத்தினால்தான் கட்சி வலிமையாக இருக்கும் என்று டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணிகளை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி உள்ளார்.

அண்ணாமலை
இதற்காக பாஜக சார்பாக எனது பூத் வலிமையான பூத் எனும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்தே தற்போது மாவட்ட வாரியாக பூத்களை அமைக்கும் பணிகளை பாஜக முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு மாவட்டங்களில் பூத்களுக்கு சென்று பார்வையிட இருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்கள் அவர் மக்களை நேரில் சென்று சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

என்ன பிளான்?
பூத் கமிட்டியை சரி செய்வது மட்டுமின்றி பிரபலமான நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் பாஜக ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை கட்சிக்குள் கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. கல்வித்துறை, சினிமா, விளையாட்டு ஆகிய துறையை சேர்ந்தவர்களுக்கு பாஜக சார்பாக நூல் விடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாஜக சார்பாக அழைப்பு விடப்பட்டு வருகிறதாம்.

பாஜக வழக்கு
இந்த நிலையில்தான் பாஜகவில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சிலர் தகவல் கொடுத்து இருக்கிறார்களாம். சமீப காலமாக பல்வேறு வழக்குகள் இருக்கும் குற்றவாளிகள், ஜெயிலுக்கு போயிட்டு வெளியில் இருக்கும் பலர் பாஜகவில் இணைந்து உள்ளனர். சில குற்ற பின்னணி கொண்ட நபர்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர். அதோடு சமீபத்தில் வேறு ஒரு முக்கியமான நபரும் பாஜகவில் இணைவதாக இருந்தது.

கடைசி நேரம்
அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் தடைபட்டது. அந்த குறிப்பிட்ட நபர் மீது முக்கியமான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. முக்கியமாக சில பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த நிலையில்தான் கடைசி நேரத்தில் அந்த முக்கிய புள்ளி பாஜகவில் இணைவது நிறுத்தப்பட்டது. அதாவது இந்த நிகழ்வு தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த புள்ளி எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளது.

என்ன நடக்கும்?
இந்த நிலையில்தான் உறுப்பினர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சிலர் புகார் பட்டியல் வாசித்து இருக்கிறார்களாம். உறுப்பினர்கள் சேர்க்கையில் பேக் கிரவுண்ட் செக் செய்வது இல்லை. இதனால் பாஜகவின் பெயர்தான் கெடுகிறது. உடனே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் நிர்வாகிகளை பேக் கிரவுண்ட் செக் செய்யாமலே கட்சியில் இருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிலர் டெல்லிக்கு புகார் பட்டியல் வாசித்து இருக்கிறார்களாம்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைமை வட்டாரமோ.. இதில் பலர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. பாஜக கொள்கை பிடித்தே கட்சிக்கு வருகிறார்கள். உறுப்பினர் சேர்க்கையில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications