சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமாவளவனை போலவே "குறி"?.. ஆ.ராசா பற்றி ஸ்டாலின் பேசவே மாட்டாரா.. ஆவேசத்தில் பாஜக + ஹிந்து முன்னணி

திருமாவளவனை போலவே அர்ஜூன் சம்பத் குறி வைக்கப்படுகிறாரா என கேள்வி எழுப்புகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஆ. ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் இருக்கிறது.. இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.. அவரை திமுகவில் இருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.. இதையடுத்து, ஆ.ராசா மீதான எதிர்ப்புகள் கூடி கொண்டே வருகின்றன.
ஆ.ராசா பேச்சு வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.. அதில் இந்துக்களை இழிவாக பேசிவிட்டதாக பாஜகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச் ராஜா, வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி முதல் அர்ஜூன் சம்பத் வரை எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆ.ராசா பேச்சை திமுக ஊக்குவிக்கிறதா? சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்! ஆ.ராசா பேச்சை திமுக ஊக்குவிக்கிறதா? சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

 டிஜிபி + கமிஷனர்

டிஜிபி + கமிஷனர்

ஆ.ராசா பேசியபோது, "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்ற இந்த பேச்சுக்குதான், தமிழக பாஜக, சென்னையில் டிஜிபியிடம் புகார் தந்துள்ளது.

 காடேஸ்வரா

காடேஸ்வரா

இந்து முன்னணி கட்சியோ, ஜனாதிபதியிடமே சென்று முறையிட போகிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.. நேற்றுகூட அர்ஜுன் சம்பத் பேசும்போது, ஆ.ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது. இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது அவரை திமுகவில் இருந்து நீக்கி மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய திமுக ஆட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் மோடியும் அமித்ஷாவும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன்.

 டரியல் பிளான்

டரியல் பிளான்

வன்முறையை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தினருக்கு போராட்டம் நடத்த ஸ்ரீ ரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் அதிபர் உலக அளவில் முதல் இடம் பெற்றது பெருமை கொள்ளப்பட வேண்டியது. அதானி உண்மையான தேசபக்தி கொண்டவர்கள். மோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பது இடது சாரி கட்சிகளின் பொய் பிரச்சாரம் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

 கரு. நாகராஜன்

கரு. நாகராஜன்

சென்னையில், டிஜிபியிடம் பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜன் புகார் தந்துள்ளார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் புகார் தந்துள்ளார்.. அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி புகார் தந்துள்ளார்.. இப்படி ஏகப்பட்ட புகார்கள் ராசா மீது குவிந்து வரும் நிலையில், திருமாவளவனை போலவே, பாஜகவினர் இவரையும் குறிவைத்து வருவதாக மாற்று கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

 மனுதர்மம்

மனுதர்மம்

ஆ ராசா மீதான எதிர்ப்புகள் சோஷியல் மீடியாவிலும் பாஜகவினர் பதிவு செய்து வருகிறார்கள்.. அப்போது ராசாவுடன் சேர்த்து திருமாவளவனையும் வம்புக்கு இழுத்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இவர்கள் 2 பேரும்தான், இந்துக்களுக்கு எதிராக மக்களை திசை திருப்பி கொண்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.. மேலும், மனுதர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி அன்று திருமா பேசிய பேச்சையும் பதிவிட்டு வருகிறார்கள்.

 திருமாவளவன் + ராசா

திருமாவளவன் + ராசா

கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் பேசியபோதே, ஸ்டாலின் தட்டிக் கேட்டிருந்தால், ஆ ராசா இன்று இந்துக்களை இழிவாக பேசுவாரா? ஆ ராசாவின் கருத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன்படுகிறாரா? இல்லையா? அதையாது தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ஆ ராசா விவகாரத்தில் திருமாவளவனை ஏன் இழுக்க வேண்டும்? அந்தந்த கட்சி பிரச்சனையில், ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒவ்வொரு மாற்று கருத்து இருக்கும்.. இதை எல்லாம் ஒன்றுபடுத்தி, தொடர்புபடுத்தி பார்க்கும் கண்ணோட்டம் சரியல்ல என்று பதிலடிகள் சோஷியல் மீடியாவில் தரப்பட்டு வருகின்றன.. இப்படி திருமாவளவன் + ராசா இருவர் மீதான பரபரப்புகள் எகிறி கொண்டேயிருக்கின்றன.

English summary
Is DMK MP A Raja targeted like VCK Leader Thirumavalavan and What action is MK Stalin going to take
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X