வெளியே எட்டி பார்க்காத எடப்பாடி.. கையில் கட்டுடன் போன "லீகல் டீம்".. என்ன நடந்தது கிரீன் வேஸில்?
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். நெருங்கிய நிர்வாகிகளை மட்டுமே அவர் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு முடிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அதிமுகவில் இனி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும்.
பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு நபர்கள் கோரிக்கை வைத்தால் அதை ஏற்றுக்கொண்டு ஒரு ஆணையர் மேற்பார்வையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது .

எடப்பாடி ஆப்சன்
எடப்பாடிக்கு இப்போது 3 விதமான ஆப்சன் உள்ளது. முதல் விஷயம் இந்த பொதுக்குழு தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வது. அதாவது இனியும் பொதுக்குழுவை கூட்டாமல் நீதிமன்றம் மூலமாகவே.. தான்தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று உறுதி செய்வது. இது முதல் வகை. ஆனால் இது கொஞ்சம் நீண்டது. ஏனென்றால் இரட்டை நீதிபதி அமர்வு, பின்னர் உச்ச நீதிமன்றம் என்று வழக்கு நீண்டு கொண்டே செல்லும்.

இரண்டாவது ஆப்சன்
இரண்டாவது ஆப்சன் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது. பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு நபர்கள் கோரிக்கை வைத்தால் அதை ஏற்றுக்கொண்டு ஒரு ஆணையர் மேற்பார்வையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . இதை பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அப்படி செய்தால் அதை ஓ பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி சட்டப்படியே எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆக முடியும்.

மூன்றாவது ஆப்சன்
இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு இரட்டை தலைமை தொடர ஒத்துழைப்பது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் சமாதானமாகி சென்று, இரட்டை தலைமையை ஏற்றுக்கொள்வது. ஆனால் இந்த மூன்றாவது விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது. பெரும்பாலும் முதல் இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை எடப்பாடி பழனிசாமி பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தற்போது வீட்டிற்கு உள்ளேயே முடங்கிஉள்ளார் .

செய்தியாளர் சந்திப்பு
அவருக்கு ஏற்பட்ட பூச்சிக்கடி காரணமாக அவர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர் முகத்திலும் தடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டிற்கு உள்ளே இருந்த படியே நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். நேற்று மாலை இவர் சட்ட வல்லுனர்களை சந்தித்தார். தீர்ப்பின் முழு காப்பி மாலையில்தான் வெளியானது. இதை எடுத்துக்கொண்டு அவரின் சட்ட குழு நேற்று எடப்பாடி வீட்டிற்கு சென்றனர்.

சட்ட குழு
கட்டு கட்டாக சில கோப்புகளையும் எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அவர்கள் சென்றனர். எடப்பாடி வெளியே வராத நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று இவர்கள் ஆலோசனை செய்தனர். அதன்பின் சில மாஜி அமைச்சர்களை எடப்பாடி சந்தித்தார். பெரும்பாலும் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அது எளிமையான வழி என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதையே செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications