பேலஸில் "சதித்திட்டம்".. கண்கள் சிவந்த எடப்பாடி.. மொத்தமாக தூக்கி அடிக்க முடிவு.. அதிமுகவில் திடுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பிளவுகள் உண்டாகும். கட்சிக்கு உள்ளேயே இதற்காக காத்துகொண்டு இருக்கின்றன. ரிசல்ட் வந்ததும் இரண்டு பேரின் பதவிகளை பறிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். கட்சிக்கு உள்ளேயே சிலர் அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களை தூக்க எடப்பாடி ரெடியாக உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். .

2024 லோக்சபா தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக கேம்பில் திடீரென சலசலப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

Is Edappadi Palanisamy upset with AIADMK camp Is he going to fire two major leaders in party

உதாரணமாக நேற்று நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நடக்கும் இந்த மோதல் குறித்தும், லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி; அதில், அதிமுகவில் இப்போதே பிரச்சனைகள் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுகவில் பெரிய அளவில் மோதல்கள் ஏற்படலாம். அதிமுகவில் பிளவுகள் உண்டாகும். கட்சிக்கு உள்ளேயே இதற்காக காத்துகொண்டு இருக்கின்றன. ரிசல்ட் வந்ததும் இரண்டு பேரின் பதவிகளை பறிக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். கட்சிக்கு உள்ளேயே சிலர் அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களை தூக்க ஆட்கள் ரெடியாக உள்ளனர்.

கட்சியில் ஒருவர் இருக்கிறார்.. அவரின் முக்கியமான பதவியை தூக்க ரெடியாகி இருக்கிறார். சென்னையில் உள்ள நிர்வாகிகள் மீது எடப்பாடி அப்செட்டில் இருக்கிறார். தி நகர் சத்யா, ஜெயக்குமார், ராஜேஷ், ஆதிராஜா ராம், வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் மீது எடப்பாடி அப்செட்டில் இருக்கிறார். சென்னையில் தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்ட நிதிகள் நிர்வாகிகளிடம் செல்லவில்லை.

எடப்பாடி பணம் கொடுத்துள்ளார். எடப்பாடி கொடுத்த பணம் கீழே செல்லவில்லை. பூத் காசு கீழே செல்லவில்லை. அதேபோல் பூத் கமிட்டி கூட இல்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் எல்லாம் பூத் கமிட்டி கூட இல்லை. அவ்வளவு மோசமான நிலை அங்கே இருந்தது. இங்கெல்லாம் வேட்பாளர் கூட வரவில்லை. அதிமுக வேட்பாளர் கூட இங்கே வரவில்லை.

சீமான் கூட இங்கெல்லாம் பணிகளை செய்தார். ஆனால் அதிமுக செய்யவில்லை. இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவில் சிக்கல் ஏற்படும். இந்த தோல்விக்கு பின் கட்சியில் ஒருவர் சும்மா இருக்க மாட்டார். லீலா பேலஸில் இதற்காக ஆலோசனைகள் நடக்கின்றன. சசிகலா, தினகரன் இதற்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

தேர்தல் முடிந்ததும் கட்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். தோல்விக்கு பிறகுதான் கட்சியில் மாற்றங்கள் ஏற்படும். கடந்த சட்டசபை தேர்தலில் 30 இடங்களில் அதிமுக டிடிவி தினகரன் காரணமாக அதிமுக தோல்வி அடைந்தது . அதிமுகவில் பெரிய கலகம் ஏற்படும். இதற்கு நிர்வாகி ஒருவர் தலைமையில் கட்சிக்கு சிக்கல் வரும்., மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+