லோனுக்கு இன்சூரன்ஸ் கட்டாயமா? வங்கிகள் விரிக்கும் வலை.. எப்படி தப்பிப்பது?
சென்னை: வாகன இன்சூரன்ஸ் தவிர மற்ற எந்த இன்சூரன்சும் இந்தியாவில் கட்டாயம் இல்லை. இந்த நிலையில், லோன் எடுப்பவர்களை குறி வைத்து இன்சூரன்ஸை வங்கிகள் அவர்கள் தலையில் கட்டுகின்றன. அதாவது வங்கிகள் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதற்கு கடனை பயன்படுத்துகின்றன.
நாம் வாங்கும் தனிநபர் கடனுக்கு (பர்சனல் லோனுக்கு) இன்சூரன்ஸ் தேவையில்லை. ஏனென்றால், அதனுடைய ரிஸ்க் அதிகமாதலால், வட்டியும் அதிகம். நீங்கள் எடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
அந்த ரிஸ்க்கை வங்கிகள் தான் எடுக்க வேண்டும். நாம் அல்ல. ஆனால் நாம் கடன் வாங்கும் போது, இன்சூரன்ஸ் எடுக்கலாம் என்று விருப்பமாக வைப்பார்கள். அதை பார்க்கும் நாம் கடனை கட்ட முடியாமல் போய்விடுமோ என்று பயந்தும், வேலை இல்லாமல் போனால் சிக்கலாகிவிடும் என்று பயந்தும் இன்சூரன்ஸ் எடுக்கிறோம்.

வீட்டு லோன்
அதேபோல் வீட்டு லோன் மற்றும் நகைக்கடன் - இவை இரண்டுமே பொருட்கள் மீது தரப்படும் கடன். இந்த இரண்டு கடன்களிலுமே ரிஸ்க் என்பது 0%. ஏனென்றால், உங்களுடைய சொத்தின் அடிப்படையில் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. இதற்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் என்று கூறி, அவர்களுடைய products ஐ நம் தலையில் கட்டி விடுவார்கள். எனவே நாம் அந்த இன்சூரன்ஸை ஏற்க கூடாது.

வங்கிகளுக்கு லாபம்
இதனிடையே இன்சூரன்ஸ் வாங்கினால் தான் லோன் கிடைக்குமென்று சொன்னால், காப்பீட்டு ரூல்ஸ்க்கு எதிரானது. எனவே இன்சூரன்ஸை தாராளமாக நீங்கள் மறுக்கலாம். இந்த இன்சூரன்ஸ் தான் - வங்கிகளுக்கு பெரும் லாபம். ஆனால் உங்களுக்கு பெரிய நஷ்டம்.

பிராசசிங் பீஸ்
இது ஒருபக்கம் எனில், வங்கிகள் கடனை அடைக்க வட்டியை நிர்ணயிக்கின்றன. ஒரு கடன் கொடுப்பதற்கான அனைத்து செலவினங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே, வங்கிகள் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. அதற்கும் மேலே, 0.50% முதல் 2% வரை Processing Fees வசூலிக்கின்றன. இது போதாதென்று documentation charges மற்றும் இன்னும் பிற கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவைகளை முழுவதுமாக நம்மால் avoid பண்ண முடியாவிட்டாலும் கடன் எடுக்கும் முன்பு, Processing Fees மற்றும் இதர கட்டணங்களை குறைக்கச் சொல்லலாம். வட்டியை கூட நீங்கள் குறைக்கச் சொல்லலாம். இவையெல்லாம் லோன் approve ஆன பின்பு, disbursal க்கு முன்பு நீங்கள் பேசுங்கள். கண்டிப்பாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

விழுந்துவிட வேண்டாம்
அதேபோல் முதலீடு செய்ய விரும்பினால் வங்கிகள் வழங்கும் முதலீட்டு வாய்ப்பின் வழங்குப் பத்திரம் (prospectus) வாங்கி முழுவதுமாக படியுங்கள். அதேபோல் வங்கியில் கடன் வாங்கும் முன்பு அனைத்தையும் படித்து பாருங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நல்ல முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொண்டு முடிவெடுங்கள். வங்கிகள் விரிக்கும் வலையில் விழுந்துவிட வேண்டாம். இந்த தகவலை ராஜேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications