"இடிக்குதே".. ஸ்டாலினை தனியாக சந்தித்த "வாரிசு".. ஞாபகம் இருக்கா.. விஷயமே இதானாமே.. மேலிடத்தில் புயல்

எடப்பாடி பழனிசாமியின் முக்கியத்துவம் கட்சிக்குள் எகிற காரணங்கள் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு யார் தலைவர் என்ற விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.. அதேசமயம், பெரும்பாலான நிர்வாகிகள், எடப்பாடிக்கே ஆதரவு தருகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.. அப்படியானால் ஓபிஎஸ் மீது அதிருப்தி ஏன்? என்ற கேள்வி அதிமுகவையும் தாண்டி எழுந்துள்ளது.

அதிமுக கூடாரமே டென்ஷனில் காணப்படுகிறது.. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி நடக்க இருக்கிறது...

அந்த கூட்டத்தில் பல்வேறு விஷயம் குறித்து பேசப்பட்டாலும், அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற விஷயம் வெடித்து கிளம்பி உள்ளது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி கட்சியையும், ஆட்சியையும் தன் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருந்தாரோ, அதுபோலவே, எடப்பாடி பழனிசாமி பிளான் செய்து வருகிறார்.. ஒற்றை தலைமை என்ற முழக்கத்தை முன்வைத்தும், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தந்தும் முன்மொழிந்தும் வருகிறார்கள்.. ஆனால், ஓபிஎஸ் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அதிமுகவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

கன்ட்ரோல்

கன்ட்ரோல்

ஆரம்ப காலத்தில், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமே சரிசம முக்கியத்துவம் கட்சிக்குள் தரப்பட்டு வந்தது.. சரிசமம் என்று இல்லாவிட்டாலுகூட, கொங்கு மண்டலம் முழுக்க எடப்பாடி கன்ட்ரோலிலும், தென்மண்டலம் முழுக்க ஓபிஎஸ் கன்ட்ரோலிலும் இயங்கி வந்தது.. அவ்வப்போது இந்த ஒற்றை தலைமை குறித்த பேச்சு வந்தாலும், எடுத்த எடுப்பிலேயே அது அப்படியே அமுங்கிப்போய்விடும்.. முதல்வராக வர வேண்டிய நாம் 2வது இடத்தில் தள்ளப்பட்டுவிட்டோமே என்ற வருத்தம் ஓபிஎஸ்ஸுக்கு கடந்த 5 வருடங்களாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

செல்வாக்கு

செல்வாக்கு

எனினும், தன்மீதான மதிப்பையும், செல்வாக்கையும் ஓபிஎஸ்ஸே குறைத்து கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.. எந்த முடிவு எடுத்தாலும் ஓபிஎஸ் அதில் கறார்தன்மையை காட்டுவதில்லையாம்.. ஏற்கனவே சசிகலா பெயரை எடுத்தாலே எடப்பாடி டென்ஷன் ஆகும்போது, சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்வது குறித்து, சொந்த ஊரிலேயே, சொந்த பண்ணை வீட்டிலேயே ஆலோசனை கூட்டத்தை, ஆதரவாளர்கள் நடத்தும் அளவுக்கு ஓபிஎஸ் சென்றுவிட்டது இரண்டாவது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

ஓ.ராஜா

ஓ.ராஜா

சசிகலா விஷயத்தில் கறார்தன்மையை காட்டாமல் இருந்துவருவதுடன், ஓ.ராஜா சந்தித்து பேசியது எடப்பாடிக்கு கொஞ்சம் அதிர்ச்சிதானாம்.. ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டபிறகும்கூட, சசிகலா கட்சிக்குள் வேண்டாம் என்று ஓபிஎஸ் திடமாக சொல்லாமல் இருப்பதும், சொந்த கட்சிக்குள் பலவீனத்தை பெற்று தந்துள்ளதாக கூறுகிறார்கள்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் மகன் தனியாக சந்தித்து பேசியதுதான், ஒட்டுமொத்த நிர்வாகிகளின் அதிருப்திகளுக்கும் காரணமாம்.

தனியறையில் சந்திப்பு

தனியறையில் சந்திப்பு

முதல்வரை சந்தித்த, ஓபி ரவீந்திரநாத், உள்ளே நுழைந்ததுமே, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை பரிசாக அளித்தார்.. பிறகு தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் குறித்த மனுவை முதல்வரிடம் அளித்தார். தொகுதிகளுக்கான கோரிக்கை குறித்த மனுவை முதல்வரிடம் ஒரு எம்பி வழங்குவது என்பது இயல்பான விஷயமே.. எம்பிக்கள் என்றில்லை, யாராக இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒரு மாநில முதல்வரை அணுகுவது வழக்கமான ஒன்றுதான்.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுகூட, எதிர்க்கட்சியான திமுக தரப்பில் எத்தனையோ பேர் இப்படி துறை ரீதியான சந்திப்புகளை நடத்தி உள்ளனர்.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

அந்த வகையில் ரவீந்திரநாத், ஸ்டாலினை சந்தித்து பேசியது வழக்கமானதாக எடுத்து கொண்டாலும்கூட, அதையும் மீறி சலசலப்பு எழுந்துள்ளது.. அதற்கு முதல் காரணம், எம்பிக்கள் அனைவருமாக சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்காமல், தனியாக சென்று ஸ்டாலினை சந்தித்ததுதான்.. அதைவிட முக்கியம், திமுக அரசை ரவீந்திரநாத் பாராட்டியதுதான், அதிமுகவில் கடுப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

கருணாநிதி

கருணாநிதி

சட்டசபை நிகழ்வுகள் பலவற்றில், கருணாநிதியை குறித்த நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம் ஓபிஎஸ், மனம்திறந்து பாராட்வே செய்தார்.. இருந்தாலும், இது சட்டசபை மாண்பு என்றே கருதப்பட்டது.. ஆனால், ஓபிஎஸ் பாராட்டுவதற்கும், ஓபிஎஸ் மகன் பாராடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. திமுகவை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தார், இப்படி வெளிப்படையாக திமுகவை பாராட்டிவிட்டு வந்தால் என்ன அர்த்தம்? என்றுகூட கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு குரல்கள் வந்ததாம்..

குழப்பும் ஓபிஎஸ்

குழப்பும் ஓபிஎஸ்

இதற்கும் ஓபிஎஸ் சரியான காரணத்தை சொல்லவில்லை.. எதிலும் தெளிவு இல்லாதது, திடீர் திடீர் என குழப்புவது, உறுதிப்பாடு இல்லாதது போன்றவை எல்லாமே சேர்ந்துதான் அவர்மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.. ஆனால்,எடப்பாடியோ, எல்லா விஷயத்திலுமே உறுதியாக இருந்தார் என்பதால்தான், தென்மண்டல நிர்வாகிகளும், மா.செ.க்களும்கூட இன்று எடப்பாடிக்கு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது.. இருந்தாலும் யார்தான் தலைவராக வரப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+