"மேட்டறே" வேறயாமே.. அமித்ஷா வைத்த "வெடி".. ஸ்டாலினின் மெகா அஸ்திரம்.. இது ஜஸ்ட் ஆரம்பம்தான்..!

பாஜகவுக்கு செக் வைக்க திமுக புது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புது அஸ்திரத்தை திமுக கையில் எடுத்து உள்ளதாம்.. அதற்கு காரணம் தமிழக பாஜக தான் என்கிறார்கள்.. என்ன நடக்கிறது அறிவாலயத்தில்..?

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.. அதிமுகவை முந்திக் கொண்டு போகிற வேகத்தை பார்த்தால், தனித்து களமிறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்.

அதிலும் இந்த எம்பி தேர்தலில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மாநில தலைமை செயல்பட்டு வருகிறது..

திமுக

திமுக


இதற்காக, மக்களின் கவனத்தை கவரும் வகையில், தன் பாணி அரசியலை மாற்றி கொண்டுள்ளது.. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஒன்றையொன்றை தாக்கி கொள்வதும், மாநில அரசை கண்டித்து இன்னொரு கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் வழக்கம். அதைதான் கடந்த 3 மாத காலமாகவே அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.. அதிமுக வாய் திறக்கிறதே இல்லையோ, திமுகவை விமர்சித்து முதல் குரலை கொடுத்துவிடுவதுடன், கையோடு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து வருகிறார்..

டேமேஜ்

டேமேஜ்

இதன்மூலம் மக்களுக்கு தாங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டி கொள்வதுடன், திமுகவையும் டேமேஜ் செய்ய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஓரளவு உதவி கொண்டிருக்கின்றன.. இதில் ஒரு படிமேலே போய், அண்ணாமலை மேற்கொண்ட இலங்கை விசிட்டானது, திமுகவை சற்று யோசிக்க வைத்துள்ளது.. காரணம், இலங்கை தமிழர் விவகாரங்கள் என்றாலே திமுக, அதிமுக மட்டுமே இத்தனை காலமும் வாய் திறந்து வந்தது..

படுகொலை

படுகொலை

இலங்கை பிரச்சனையை அதிகமாக பேசியதும் திராவிட கட்சிகள் மட்டுமே.. பாஜக பொதுவாக இந்த விஷயங்களில் இதுவரை தலையிட்டது இல்லை... அப்பாவி மீனவர்கள் படுகொலை விஷயத்தில்கூட பெரிதாக செயல்பாடுகளை காட்டாத நிலையில், தமிழக பாஜகவின் திடீர் அதிரடிகளை திமுக கவனித்துள்ளது.. சுருக்கமாக சொல்லப்போனால், அமித்ஷா சென்னைக்கு வந்து போனதில் இருந்தே தமிழக பாஜக புது ரூட்டை கையில் எடுத்துள்ளது..

 அஸ்திரம்

அஸ்திரம்

இப்படியே விட்டால் சரியாகாது, எதையுமே ஆரம்பத்திலேயே தவிடுபொடியாக்கிவிட வேண்டும் என்பதுடன், எம்பி தேர்தலில் மகத்தான வெற்றியையும் கைப்பற்ற வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளது.. அதற்காக முதல் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது, திமுகவில் தற்போதுள்ள மாவட்ட செயலர்களில், 50சதவீதம் பேர் மாற்றப்பட உள்ளார்களாம்... குறிப்பாக, 50 முதல் 60 வயதுள்ளவர்களையே, மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது..

 இளைஞர்கள்

இளைஞர்கள்

இதற்கும் காரணம் உண்டு.. தற்போது தமிழக பாஜக இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ளது.. அப்படி வரும் இளைஞர்களுக்கு பதவிகளையும் தந்து அழகு பார்க்கிறது.. அந்தவகையில் திமுகவும் அதே ஐடியாவை யோசிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது..

 77 மா.செ.க்கள்

77 மா.செ.க்கள்


2, 3 சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில் இப்போதைக்கு 77 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.. இந்த எண்ணிக்கையை நிர்வாக வசதிக்காக குறைக்க உள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், திருவள்ளூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள், ஒருங்கிணைந்த மாவட்டங்களாக மாறும் நிலை உருவாகி உள்ளதால், அங்கு இப்போதிருக்கும் மா.செ.க்களுக்கு சிக்கல் வரலாம் என்றும் தெரிகிறது.

 புது ரத்தம்

புது ரத்தம்

எனவே, சம்பந்தப்பட்ட மா.செ.க்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள, திமுக புள்ளிகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, "ஒருவேளை, மாவட்ட செயலாளர்களாக இளைஞர்களை க்களாக கொண்டுவந்தால், அது நிச்சயம் கட்சிக்குள் புது ரத்தம் பாய்ந்ததுபோலவே இருக்கும்.. அது கட்சியின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்..

 திமுக மேலிடம்

திமுக மேலிடம்

மற்றொருபுறம், ஒருங்கிணைந்த மாவட்டங்கள் ஏற்படும் பட்சத்தில், எந்தெந்த மா.செ.க்களுக்கு பதவிகளை இழக்க நேரிடுகிறதோ, அவர்களை திமுக மேலிடம் நிச்சயம் வேறு ஏதாவது பொறுப்பு தந்து வைத்து கொள்ளும்.. இத்தனை காலமும் கட்சிக்காக பாடுபட்ட அவர்களை அதிருப்திக்கும், கலக்கத்திற்கும் விட்டு விடாது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. திமுக எடுக்க போகும் அதிரடிகள், கட்சிக்கும் நன்மை பயத்து, பாஜகவுக்கும் செக் வைக்க உவுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+