• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்து இல்லாம, ராஜராஜ சோழன் முஸ்லிமா,கிறிஸ்தவரா? வெற்றிமாறன் எப்படி சொல்லலாம் -இயக்குநர் பேரரசு கோபம்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜராஜ சோழனை இந்து மன்னர்களாக மாற்றிவிட்டார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜராஜசோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என வெற்றிமாறன் கூறுகிறார். அப்படியென்றால் அவர் என்ன கிறிஸ்தவரா? இல்லை இஸ்லாமியரா? என்று பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!

திராவிட இயக்கம்

திராவிட இயக்கம்

சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள்.

அடையாளங்கள்

அடையாளங்கள்

கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் இந்து அரசனா?

ராஜராஜ சோழன் இந்து அரசனா?

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று கூறினார்.

இயக்குநர் பேரரசு கண்டனம்

இயக்குநர் பேரரசு கண்டனம்

வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு, "எந்த மேடையிலும் இந்து மக்களை இழிவுபடுத்துவதையே வேலையாக வைத்துள்ளனர். வேறு வேலையே இல்லையா? இந்து சாமியை இழிவுபடுத்துபவர்களுக்கு பதில் சொன்னால் மதவெறியர் என்கிறார்கள்.

ராஜராஜசோழன் என்ன மதம்?

ராஜராஜசோழன் என்ன மதம்?

ராஜராஜசோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என வெற்றிமாறன் கூறுகிறார். அப்படியென்றால் அவர் என்ன கிறிஸ்தவரா? இல்லை இஸ்லாமியரா? ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டபோது இந்தியா மாகாணமாக இருந்தது. அதையெல்லாம் ஒன்றிணைத்து இந்தியா என்கிறார்கள். நாமெல்லாம் இந்திய குடிமக்கள்தானே. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதானே இருந்தது. அதை சேர்த்துதானே தமிழ்நாடு என்கிறோம். அப்படியென்றால் தமிழ்நாடே இல்லை என்பீர்களா?

நாத்திகர்கள்

நாத்திகர்கள்

அதேபோல்தான் சைவம், வைனவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை. 100% நாத்திகர் என்றால் எல்லா தெய்வங்களையும் இல்லை என்று சொல்ல வேண்டும்" என்றார்.

English summary
Director Perarasu has condemned the comment made by director Vetrimaran that Rajaraja Chola has been turned into Hindu king. Saturday Vetrimaran said that, "They dressing Thiruvalluvar with saffron, and Making Rajaraja Chola as a Hindu king. He also said many symbols are being taken away from us and request that film directors should be politicised."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X