ட்விஸ்ட்.. சிட்டிங் அமைச்சர் மீது தாக்குதல்.. அமலாக்க துறையினரையே கைது செய்ய தமிழ்நாடு அரசு பிளான்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையினரையே கைது செய்ய தமிழ்நாடு அரசு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று அமலாக்கத்துறையினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக தமிழ்நாடு அமைச்சர்கள் கூறி இருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்கள் உதயநிதி , சுப்ரமணியன் ,வேலு , ரகுபதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் வருகை புரிந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக திமுகவின் டாப் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அவர் துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் உறுதியாக செய்தி வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி அமைச்சர் எஸ் ரகுபதி அளித்த பேட்டியில், திமுக அமைச்சர் என்ற காரணத்தாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்; அமைச்சரை மன உளைச்சலுக்கு ஆளாக்கவே அமலாக்கத்துறை நடவடிக்கை
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ச்சியாக 24 மணி நேரம் விசாரணை செய்து சித்ரவதை செய்துள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல். திமுக அமைச்சர் என்பதாலேயே செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டிருக்கிறார்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. மக்கள் மன்றத்தின் முன்பும், மக்கள் முன்பும் பாஜக அரசு பதில் சொல்லியாக வேண்டும்; அமைச்சரை மன உளைச்சலுக்கு ஆளாக்கவே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.
துன்புறுத்தல் குறித்து அடித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக அஞ்சாது; அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தி இருக்கின்றனர்.
அவர் இப்போது மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி ICU ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சுய நினைவில்லாமல் உள்ளார்; நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை; அவர் காது அருகே வீக்கம் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. திமுக இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இப்படி டாப் அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டதாக கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு கண்ணதாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.
அமலாக்க துறையினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி கூறினார். கைது செய்த போது இழுத்துச் சென்றதாகவும் அப்போது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். தன்னை தாக்கிய அதிகாரிகள் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணையத்திற்கு தாமாக சென்று விசாரணை நடத்த உரிமை உள்ளது, என்று கூறினார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை துறையினரையே கைது செய்ய தமிழ்நாடு அரசு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாரன்ட் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதாக கூறி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்க துறையினரை கைது செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் சட்ட ஆலோசனை செய்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications