கூட்டுறவுத்துறை கடன்களுக்கும்.. இனி சிபில் ஸ்கோர் அவசியம்? வெளியான ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டு உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதற்கு கூட்டுறவுத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை, இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் .. அதேபோல் ஏற்கனவே நிறைய கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

repo rate

இது தொடர்பாக அளிக்கப்பட்டு உள்ள விளக்கத்தில், விவசாயிகளின் குறுகியகால வேளாண் கடன் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக உழவர் கடன் அட்டை திட்டம் (Kisan Credit Card KCC) 1998ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வேளாண் பணிகளுக்கு குறுகிய காலக் கடன்களைப் பெற விவசாயிகளுக்கு உதவுவதோடு வேளாண்மை சார்ந்த கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட இதர காரியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை திட்டத்தின் (KCC Crop Loan) கீழ் வட்டியில்லா பயிர்க்கடன், நகை அடமானத்தின் பேரில் பயிர்க்கடன் (KCC AH ) கால்நடைப் பராமரிப்பு பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கான நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மீன் வளர்ப்பு பராமரிப்பு கடன்கள் தற்போது அதிகளவில் வழங்கப்பட்டு வருவதால் இக்கடன்கள் வழக்குதல் தொடர்பான மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் வருக்கப்பட்டு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு பராமரிப்பு கடன்கள் வழக்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் நடைமுறைப்படுத்தி தெரிவிக்கப்படுகிறது.\4 மண்டல இணைப்பதிவாளர்கள் மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு / பராமரிப்பு கடன்கள் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தொடர்புறுத்தி உரிய துணைவிதிகளின் இவ்வழிகாட்டு நெறிமுறைகள் உடன் அங்கீகரிக்கப்பட்டு வழுவாது நடைமுறைப்படுத்தப்படுவதை மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை 5 மை இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும்.
நடைமுறை மூலதனக்கடன் (Working Capital தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இக்கடன் வழங்கப்பட வேண்டும்.
டன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது ரூ2 இலட்சம் வரை தனிநபர் ஜாமீன் அடிப்படையில் பிணைமின்றி கடன் வழங்குவது போல் இக்கடன்களும் வழங்கலாம்.
வேளாண் அட்டை திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ரூ. 2 இலட்சத்திற்கு உட்பட்டு இக்கடன் வழங்கப்படும். பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு /அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ஆகிய இரண்டு கடன்களுக்கும் சேர்த்து ரூ. 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க் கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ரூ2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதனக் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுசங்க வங்கிகளுக்கு வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD இத்திட்டத்திற்கு வருக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்றப்பட வேண்டும்

சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை, இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் .. அதேபோல் ஏற்கனவே நிறைய கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+