“தளபதி” விஜய் வந்த சிகப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா? புகைப்படத்தை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கருப்பு மாஸ்க் அணிந்து சிகப்பு காரில் வந்த நடிகர் விஜயின் புகைப்படங்கள் வைரலான நிலையில் நடிகர் விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என தகவல் வெளியான நிலையில் இவ்விவகாரம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

நடிகர் விஜய்
வழக்கம் போலவே இந்த தேர்தலிலும் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் வந்த நடிகர் விஜய் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிக்கும் வகையில் நடிகர் விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து வாக்களித்த தாகவும் பல்வேறு முகங்களுடன் செய்திகள் வெளியான நிலையில் அப்போது அது மிகப் பெரிய செய்தியாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.

விஜயின் சிவப்பு கார்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க தனது சிகப்பு நிற மாருதி சுசுகி செலிரியோ காரில் ரசிகர்கள் புடை சூழ ஊர்வலமாக வந்து வாக்களித்தார். கருப்பு மாஸ்க் அணிந்து சிகப்பு நிற காரில் வந்த விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் வழக்கம்போல் வெளியாகியது. இதுகுறித்த புகைப்படங்களும், கருத்துகளும் ட்விட்டர், ஃபேஸ்புக்கை ஆக்கிரமித்து இருந்தது.

இன்சூரன்ஸ் இல்லையா?
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு புதுவித டிவிஸ்ட் நடிகர் விஜய் வாக்களித்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிகப்பு காருக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படவில்லை என்பதுதான் அது. ஜோசப் விஜய் சி என்ற பெயரில் வாங்கப்பட்ட மாருதி சுசுகி செலிரியோ கார் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என தேடிப்பிடித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரசிகர்கள் வாதம்
பதிவு செய்யப்பட்ட அடுத்த ஆண்டு அதாவது 2020 மே 26ம் தேதியுடன் அந்த காருக்கான இன்சூரன்ஸ் முடிவடைந்து உள்ளதாகவும் இன்சுரன்ஸ் இல்லாத காரை ஓட்டி வந்த நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள். அதே நேரத்தில் இன்ஸ்சூரன்ஸ் தகவல்கள் சில நேரம் அப்டேட் ஆகாமல் இருக்கும் எனவும், ரோஸ்ல் ராய்ஸ் கோஸ்ட் போன்ற கார்களை வைத்துள்ல செல்வ வளம் கொண்ட நடிகர் விஜய் இன்சுரன்ஸ் கட்டாமல் இருக்க தேவை கிடையாது என்றும் அவரது ரசிகர்கள் பதில் கொடுக்க களம் சூடுபிடித்துள்ளது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications