சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆர் புகழை உறிஞ்சி பிழைக்கலாம் என அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு - நமது அம்மா சாடல்

எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தி கொள்ளலாம் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும் என்று நமது அம்மா நாளிதழில் ரஜினி, கமலைப்பற்றி பற்றி காட்டமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்திற்கு புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடியாக்கி பிழைக்கலாம் என கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும் என்று கமல்ஹாசனை அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தான் எம்ஜிஆர் மடியில் வாழ்ந்தவன் என்று தனது பிரச்சாரக் கூட்டங்களில் எம்ஜிஆரின் புகழை பாடி வருகிறார்.

Its a shame Kamal thinks they can absorb MGRs fame - Namathu Amma

அதேபோல் ரஜினிகாந்தும் இன்னொரு எம்ஜிஆராக தான் மாற முடியாது ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று கூறி வருகிறார். ரஜினி, கமலின் பேச்சுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் கூறி வந்தாலும் இன்றைய தினம் நமது அம்மா நாளிதழில் எம்ஜிஆரை முன்னிறுத்தும் ரஜினி, கமலை கடுமையாக சாடி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுபவர்கள் வேண்டுமானால், அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தலைவன்... ஓ.பன்னீர்செல்வத்தை புரோமோட் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூர்.. பின்னணியில் ஓ.பி.ஆர்..!மக்கள் தலைவன்... ஓ.பன்னீர்செல்வத்தை புரோமோட் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூர்.. பின்னணியில் ஓ.பி.ஆர்..!

கமல்ஹாசனை கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில், பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாராட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னைக் காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்லாமல் அவ்வை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா? என்று எழுதப்பட்டுள்ளது.

அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக் கொள்வதும் அனேகமாக ஒன்றுதானே என்று கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் தரப்போகிறாரோ பார்க்கலாம்.

English summary
The AIADMK's newspaper Namathu Amma has criticized Kamal Haasan for thinking that they can strengthen themselves in the name of the revolutionary leader and dreaming of surviving the MGR's reputation as the lifeblood of their political movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X